இன்று விநாயகர் சதுர்த்தி. இந்து மதத்தில் முதன்மை கடவுளாக கருதப்படுபவர் விநாயக பெருமான்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு விநாயகரின் பிறந்தநாளான இன்று சிறப்பான அருள் உள்ளது.
விநாயகரின் அருளால் அந்த ராசிக்காரர்கள் வாழ்வில் சந்திக்கும் பல தடைகளையும் உடைத்தெறிந்து வெற்றி காண்பார்கள்.
இப்போது விநாயகரின் விருப்பமான அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் விநாயகரின் சிறப்பான அருளும், ஆசீர்வாதமும் கொண்டவர்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வலிமை, வீரம் ஆகியவற்றின் காரணியாகும்.
இந்த குணங்கள் அனைத்தும் மேஷ ராசிக்காரர்களிடமும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் இருப்பதால், இவர்களின் அனைத்து வேலைகளும் முடிந்து விரைவில் சிறப்பான பலனைத் தருகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். ஜோதிடத்தில் புதன் புத்தி, வணிகம், கணிதம், தகவல் தொடர்பு, லாஜிக் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. மிதுன ராசிக்காரர்களை சிவபெருமானின் மகனான விநாயகருக்கு மிகவும் பிடிக்கும்.
ஆகவே இந்த ராசிக்காரர்களின் வழிபாட்டால் விநாயகர் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள் மற்றும் விநாயகரின் ஆசீர்வாதத்தால் இந்த ராசிக்காரர்களின் காரியங்கள் அனைத்தும் விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
மகரம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகர ராசிக்காரர்களுக்கு விநாயகரின் சிறப்பான அருள் எப்போதும் உண்டு.
மகர ராசிக்காரர்கள் சுதந்திரமான சிந்தனையும், கடின உழைப்பும் கொண்டவர்கள். விநாயகருடன், சனி பகவானுக்கும் மகர ராசி மிகவும் பிடித்த ராசி.
ஆகவே இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் உடன் இருக்கும். குறைந்த முயற்சியிலேயே நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.
தங்களின் அனைத்து வேலைகளிலும் வெற்றி காண்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்திசாலித்தனம் மற்றும் திறமையினால் எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட சமாளிப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு விநாயகரின அருள் இருப்பதால் தான், இவர்களின் பணிகளில் தடைகள் ஏதும் இருப்பதில்லை.