கன்னியில் புதன் பெயர்ச்சி – அடுத்த இரண்டு மாதங்கள் பணப் பிரச்னையில் திணற போகும் 5 ராசியினர் யார் தெரியுமா?

நவகிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன் பகவான்.

கன்னி ராசியின் அதிபதியான புதன், அவரின் சொந்த ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமைய உள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்கள் கன்னி ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார். புதனின் இந்த சஞ்சாரத்தால் எந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மேஷ ராசி
மேஷ ராசியினர் இந்த காலங்களில் தேவையற்ற சில கவலைகளுக்கு ஆளாக நேரிடும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியிட அரசியலிலிருந்து விலகி இருக்கவும். இல்லையெனில் உங்களின் மதிப்பு, மரியாதை பாதிக்கப்படக்கூடும். வயதானவர்கள் சில நோய் அல்லது ஆரோக்கிய குறைப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

கடக ராசி
கடக ராசிக்கு புதனின் இந்த பெயர்ச்சி மாற்றத்தால், உங்களின் சிந்தனை அதிகரிக்கும். உங்களின் பகுத்தறிந்து செயல்படக்கூடிய நிலை சிறப்பாக இருக்கும். இருப்பினும் தேவக்கு அதிகமாக பேசுவதை தவிர்க்கவும். இதனால் உங்களின் மரியாதை சமூகத்தில் குறையக்கூடும். சொல்வதைச் சுருங்கச் சொல்லவும். அளவாக பேசவும்.

துலாம் ராசி
துலாம் ராசிக்கு நிதி நிலை சற்று பலவீனமாக இருக்கும்.

ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் புதனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் நிதி நிலை அதிகம் பாதிக்கப்படும். எந்த ஒரு பணப்பரிவர்த்தனை விஷயங்களிலும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

கும்ப ராசி
கும்ப ராசியினர் சில விஷயங்களால் மன பலவீனமாக உணர்வார்கள். மன சஞ்சலத்தை சந்திக்க நேரிடும். உங்கள் சருமம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.

நிதி நிலையும் பெரியளவில் சாதகமாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்களின் சேமிப்பு பணம் அதிகம் செலவழிக்க நேரிடும்.

மீன ராசி
மீன ராசிக்கு புதனின் இந்த சஞ்சாரத்தால், திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையில் சிக்கல்களைச் சமாளிக்க அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படவும்.