சனி பகவான் இன்னும் சில மாதங்களில் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம்.
12 ராசிகளின் பலன்கள்
மேஷம்
லாப சனி காலம் 100 சதவிகிதம் நன்மை உண்டாகும். தொட்டது துலங்கும். நினைத்த காரியம் ஜெயமாகும்.
ரிஷபம்
தொழில் சனி காலம் தொடங்கும் காலம் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம்.
மிதுனம்
பாக்யசனி காலம் என்பதால் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம்.
கடகம்
அஷ்டமத்து சனி ஆரம்பிக்க உள்ளது. கஷ்டங்கள் என்றாலும் கவலையை விடுங்கள்.
சிம்மம்
கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். சச மகா யோகம் கை கூடி வரப்போகிறது.சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும்.
கன்னி
ருண ரோக சத்ரு ஸ்தான சனி அதிகபட்ச நன்மையைத் தரப்போகிறார். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
துலாம்
புண்ணிய சனி காலம் என்பதால் பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். அம்மா வழி சொத்துக்கள் கை கூடி வரும்.
விருச்சிகம்
அர்த்தாஷ்டம சனி என்பதால் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். சனி பகவான் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
தனுசு
உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது. நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். கஷ்டங்கள், கவலைகள் முடிவுக்கு வரப்போகிறது.
மகரம்
ஜென்ம சனி முடிந்து பாதசனி காலம் தொடங்கப்போகிறது. உங்கள் பயணங்களில் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
கும்பம்
விரைய சனி முடிந்து ஏழரை சனியில் ஜென்மசனி காலம் தொடங்குகிறது. சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. திடீர் விரைய செலவுகள் வரும். உங்களுடைய பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.