ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது அல்லது தனது இயக்கத்தை மாற்றுகிறது.
இந்த மாற்றங்களின் பலன் அனைத்து 12 ராசிகளிலும் தெரியும். அக்டோபர் மாதத்தில் 7 கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப்போகின்றன.
இதனால் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பணம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அக்டோபர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன என்பதையும் அதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
அக்டோபர் 2022 இல் கிரக மாற்றங்கள்:
- மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: அக்டோபர் 16, 2022
- துலாம் ராசியில் சூரியன்: அக்டோபர் 17 2022
- துலாம் ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: 18 அக்டோபர் 2022
- மகர ராசியில் சனியின் நேர் மாற்றம்: 23 அக்டோபர் 2022
- புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறது: 26 அக்டோபர் 2022
- மேஷத்தில் வியாழன்: அக்டோபர் 28, 2022
அக்டோபர் மாதத்தில் மேற்கூறிய கிரகங்களின் சஞ்சாரமும், நிலை மாற்றமும் சில ராசிக்காரர்களுக்கு மிக நல்ல நேரத்தை கொண்டுவரும். இதனால், இவர்கள் செல்வம், செழிப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள்.
புதனின் நேர் இயக்கம்: ராசிகளில் அதன் விளைவு புதன் வக்ர நிலையில் இருந்து நேர் இயக்கத்துக்கு மாறுவதால், துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் துவங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
செவ்வாய் மாற்றத்தின் விளைவு மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் மேஷம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான காலகட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அவர்களின் வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சூரியனின் ராசி மாற்றத்தின் பலன்கள் சிம்மம், மகர ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். தங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் பணிகளை முடிக்க இது உதவும். சக ஊழியர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.
இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் துலாம் ராசியில் சஞ்சரிப்பது சாதகமாக இருக்கும் துலாம் ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வது மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண ஆதாயம் நன்றாக இருக்கும். தங்கள் துறையில் வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிகும்.