ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.
இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மேஷம்: பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணை யின் வழியில் பண உதவி கிட்டும். சிறப்புப் பணிகளின் காரணமாக ஓய்வு எடுக்க முடியாமல் அலுவலகத்துக்குச் செல்ல நேரிடும்.
ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய தினம் புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களின் திடீர் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்: கடக ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும்.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கன்னி: கன்னி ராசியினர் இன்றைய தினம் எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
துலாம்: துலாம் ராசியினர் இன்றைய தினம் மனம் உற்சாகமாகக் காணப்படும். எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினர் இன்றைய தினம் அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணத்தின்போது கவனம் அவசியம்.
தனுசு: தனுசு ராசியினர் இன்றைய தினம் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். உற்சாகமான நாள். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும்.
மகரம்: மகர ராசியினர் இன்றைய தினம் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும்.
கும்பம்: கும்ப ராசியினர் இன்றைய தினம் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.வெளிநாடுகளில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
மீனம்: மீன ராசியினர் இன்றைய தினம் நண்பர்களிடம் கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை திறமையாக முடித்துக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.