ஜென்ம சனி ஆட்டிப்படைத்தாலும் குரு பெயர்ச்சியால் 2023 வரை இந்த 3 ராசிக்கும் ஜாக்பாட் அடிக்க போகுது?

குரு பகவான் தீபாவளி முடிந்து வக்ர நிலையில் இருந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார்.

நவம்பர் 16ஆம் தேதி முதல் குரு பகவான் நேர்கதியில் மீன ராசியில் பயணம் செய்வார்.

குரு பகவானின் சஞ்சாரம்,வக்ர நிவர்த்தி, இடப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கெல்லாம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மகரம்
ஜென்ம சனியில் ஆதிக்கத்தில் இருந்தாலும் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். கூடவே செலவுகளும் துரத்தும்.

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வந்து நீங்கும். இளைய சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் வரலாம்.

பண விசயத்தில் கவனம் தேவை.

கும்பம்
இனி எதையும் சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.

தேவையில்லாமல் பேசி சில நல்ல நட்புகளையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள்.

மீனம்
ஜென்ம குரு என்பதால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். வாக்கு கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்காதீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும். நீண்டகால சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும்.