சனி பகவானின் மிகப்பெரிய மாற்றம்: 5 ராசிகாரர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு! உங்க ராசி இருக்கான்னு பாருங்க

நீதிக்கடவுளான சனி பகவானின் மிகப்பெரிய மாற்றம் அக்டோபர் 23-ம் திகதி நிகழவுள்ளது. சனீஸ்வரன் தற்போது வக்ர நிலையில், அதாவது இயல்பான இயக்கத்துகு எதிர் இயக்கத்தில் இருக்கிறார்.

23 ஆம் திகதி, இந்த நிலை மாறி, சனி தனது வழக்கமான இயக்கத்துக்கு திரும்புவார். சனியின் நிலை மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டு வரும்.

தனது சொந்த ராசியான மகர ராசியில் கடைசி கட்டத்தில் சஞ்சரிக்கும் சனி இப்போது அக்டோபர் முதல் ஜனவரி 2023 வரை ரிஷபம் உட்பட பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல வித சங்கடங்களை ஏற்படுத்துவார். சனி பகவானின் நிலை மாற்றம் எந்தெந்த ராசிகளில் பிரச்சனைகளை உருவாக்கும் என இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் பல சிரமங்களைக் கொண்டுவரப் போகிறது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படக்கூடும். இது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில், செலவுகள் அதிகமாக இருக்கும். அதே சமயம் லாபமும் குறைவாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளும் நிதி பிரச்சனைகளும் உங்களை பாடாய் படுத்தும்.

கடகம் : சனி பகவானின் மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளைத் தரப் போகிறது. இந்த நேரத்தில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கடக ராசிக்காரர்கள் வணிக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உங்கள் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். திருமண வாழ்வில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பண இழப்பையும் சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்து அனைத்து பிரச்சனைகளையும் சமாளிப்பது நல்லது.

கன்னி : கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலை மாற்றம் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை உண்டாக்கப் போகிறது. நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகள் நடக்காமல் போகலாம்.

இதுமட்டுமின்றி, இந்த நேரத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் நலனின் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது.

மகரம் : மகர ராசிக்காரர்கள் ஏற்கனவே ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் உள்ளார்கள். தற்போது சனி பகவான் மகரத்திலேயே இயக்கத்தை மாற்றவுள்ளார். இந்த நேரத்தில் உங்கள் மனக் கவலைகள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் வரும். இதனுடன் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். வாழ்வில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம் : சனியின் மாற்றத்தால் கும்ப ராசிக்காரர்கள் அதிகம் அலைச்சலை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த நேரத்தில் உங்கள் பணச் செலவு அதிகமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியமும் சிக்கல்களை எதிர்கொள்ளும்.

ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் வெளிநாட்டு பயண திட்டங்கள் நிறைவேறும். ஆனால், இதனால் செலவும் அதிகரிக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது.