இரட்டிப்பு மகிழ்ச்சி உங்களைத் தேடி வரப்போகிறது! அதிர்ஷ்டக்காரர்கள் யார் தெரியுமா..! இன்றைய ராசிபலன்கள்

மங்கலகரமான சுபகிருது வருடம் புரட்டாதி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ( 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி) நாளைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன் ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்: மேஷத்தில் பிறந்த நீங்கள் இன்று எந்த ஒரு விஷயத்திலும் உங்களுடைய நண்பர்களிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றிக்கான வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மறைமுக எதிரிகளின் தொல்லைகளை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்த நீங்கள் இன்று எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வெறுப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்கள் நினைத்ததை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை சந்திக்கலாம் கவனம் வேண்டும். ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்: மிதுனத்தில் பிறந்த நீங்கள் இன்று குடும்ப விஷயத்தில் பொறுமை காப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிவகாரியத்தில் இருந்து வந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பதட்டம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் மேலோங்கி காணப்படும் எனவே ஆழமாக சிந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்: கடகத்தில் பிறந்த நீங்கள் இன்று சுலபமாக எதையும் பெற்றுவிட முடியாது, போராடி தான் பெற வேண்டி இருக்கும். குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் இடம், பொருள், ஏவல் பார்த்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தீராத பிரச்சனையும் தீரும்.

சிம்மம்: சிம்மத்தில் பிறந்த நீங்கள் இன்று வெளியிடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலைகளும் சுலபமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் இடையோர்கள் நீடிக்கலாம். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி: கன்னியில் பிறந்த நீங்கள் இன்று புதிய எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பிள்ளைகளால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பறவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாகும் பொன்னாளாக இருக்கப் போகிறது.

துலாம்: துலாத்தில் பிறந்த நீங்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சமயோசித புத்தியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணரீதியான விஷயத்தில் விழிப்புணர்வு தேவை. உடல்நிலை பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்யுங்கள்.

விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்த நீங்கள் இன்று செய்யும் முயற்சிகள் பலவிதம் ஆகும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க வேகத்தை காட்டிலும் விவேகத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வேலையாட்களை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

தனுசு: தனுசில் பிறந்த நீங்கள் இன்று திடீரென அதிர்ஷ்ட யோகங்களை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். சுய தொழில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களே சக பணியாளர்களை அனுசரித்து செல்லுவது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

மகரம்: மகரத்தில் பிறந்த நீங்கள் இன்று மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியாக நிகழ்ச்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற சந்தேகங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிக்கனமாக செலவழிப்பது உத்தமம்.

கும்பம்: கும்பத்தில் பிறந்த நீங்கள் இன்று எதிலும் ஆதாயம் காணக்கூடிய வாய்ப்புகளை பெற போகிறீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். முக்கிய முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிரடி மாற்றங்களை சந்திக்க நேரலாம். வியாபாரி யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

மீனம்: மீனத்தில் பிறந்த நீங்கள் இன்று தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சாதுரியமாக எதையும் பேசி சாதனை புரிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக் கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் போட்டிகள் தேவையற்றது என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.