ஆங்கில புத்தாண்டு எல்லா ராசிக்காரர்களுக்கும் பலவித மாற்றங்களைத் தரப்போகிறது.
ஏழரை சனியின் பிடியில் சிக்கிய மகர ராசிக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை இன்று பார்க்கலாம்.
மகரம்
உங்கள் தலைமேல் இருந்த சனிபகவான் 2023 இல் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார்.
இதனால் நீங்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம்.
ஏழரை சனியின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாக தவிக்கும் நீங்கள் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை கடத்த வேண்டும்.
கடந்த 5 ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருப்பீர்கள். இனி அதற்கு ஏற்றவகையில் சனிபகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார்.
மன உளைச்சல் நீங்கி நிம்மதியுடன் இருங்கள்.
புது வருடம் ஆரம்பித்து முதல் 4 மாதங்கள் குரு பகவான் பார்வையால் நன்மைகள் நடக்கும்.
சனி பகவானால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.