2022ல் கடைசி சந்திர கிரகணம்! நாளை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்: பேரழிவு ஏற்படுமா?

2022ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ள நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகளைக் குறித்து பார்க்கலாம்.

சந்திர கிரகணம்
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கின்றது. அதாவது சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது இந்நிகழ்வு நடைபெறுகின்றது.

கடந்த மாதம் 25ம் தேதி சூர்ய கிரகணம் நடைபெற்றது. சூர்யகிரகணம் முடிந்து 15 நாட்களுக்கு பிறகு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அதாவது நவம்பர் 8ம் தேதியான நாளை ஆண்டின் கடைசி சந்திர கிரகணமாகும்.

இந்த சந்திர கிரகணமானது பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை கிரகணம் நடைபெறுகிறது. கடந்த அமாவாசை தினத்தன்று சூர்ய கிரகணம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களில் பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால், எதிர்மறையான விளைவு ஏற்படுவதுடன், இயற்கை பேரழிவு ஏற்படுவதாக ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சந்திர கிரகணத்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:
ஆண்டின் கடைசி சந்திர கிரகணமான இத்தருணத்தில் சில சிரமங்களை சந்திப்பதுடன், உடல் நலப்பிரச்சினை, குழப்ப நிலையும் ஏற்படும். ஆதலால் எச்சரிக்கையுடன் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டுமாம்.

கடகம்:
இந்த ராசியினருக்கு சந்திர கிரகணம் பிரச்சினையை கொடுப்பதுடன் பணம் தொடர்பான பிரச்சினை, உறவில் சில பிரச்சினை, உடல்நல பிரச்சினை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியினர் பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடவேண்டுமாம், பண இழப்பை சந்திக்க நேரிடுவதுடன், வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படுவதுடன் திருமண வாழ்க்கை பாதிக்கக்கூடுமாம்.

மீனம்:
உடல் நலத்தில் அக்கறை காட்ட இருப்பதுடன், ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சை எந்தவொரு அலட்சியம் கொள்ளாமல் இருப்பதுடன், பண இழப்பை சந்திக்காமல், புத்திசாலி தனமாக செலவு செய்ய வேண்டுமாம்.