மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களே செல்வங்கள் பெருக வேண்டுமா? இந்த பரிகாரங்களை செய்தால் போதும்!

மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அதிபதி. ஜோதிடத்தில், செவ்வாய் வலிமை மற்றும் தைரியத்தின் காரணியாகக் கருதப்படுகிறார்.

ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமான நிலையில் இருப்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஜோதிடத்தில் செவ்வாய் தோஷம் நீங்க பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது.

இதைச் செய்வதால் வேலையில், தொழிலில் வெற்றி, செல்வம் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் கிரகத்தின் ஆசீர்வாதத்தைப் பெற என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.

செவ்வாய் கிரகத்தின் அருளைப் பெற, அனுமனை வழிபடவும். வீட்டில் அல்லது ஹனுமான் கோவிலுக்குச் சென்று சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அனுமனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஹனுமான் சாலீசா சொல்வதும் நன்மை பயக்கும். செவ்வாய் கிரகத்தின் கோபத்தை தணிக்க பவள ரத்தினம் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமை தோறும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஹனுமனை வழிபட வேண்டும்.

சிவப்பு ஆடை அணிந்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் விரதம் இருப்பதும் மிகவும் நன்மை பயக்கும்.

காலை அல்லது மாலையில், சுத்தமான நெய் விளக்கை ஏற்றி சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்து வணங்கவும்.

செவ்வாயின் அதிபதி முருகன், என்பதால், செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வணங்கினாலும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும் என கூறப்படுகிறது.

கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரம் பருப்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பதும் நல்லது.

செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் மேற்கொள்வதும், தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பதும் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும்.

மேலும், நீங்கள் வசிக்கும் இடத்தில் வேப்ப மரக்கன்றை நடுவது நல்ல பலன் தரும். இந்த செடி மரமாகும் வரை கவனித்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் சற்று பெரிய செடியை நட்டு 43 நாட்கள் பராமரிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷத்தினால் உண்டான பிரச்சனை தீரும்.