புத்தாண்டில் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகாரர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்

வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 2023 ஜனவரி 17-ம் திகதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுவார். சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார்.

இப்படிப்பட்ட நிலையில் ஜனவரி 17ல் கும்ப ராசியில் சஞ்சரித்த பின்னர் சனி 2024ல் எந்த ராசிக்கும் மாற மாட்டார். இதற்குப் பிறகு, 2025-ம் ஆண்டு மார்ச் 29 அன்று அவர் மீன ராசியில் பெயர்ச்சியாவார்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் மற்றும் சனியின் கோபத்தை என்னென்ன நடவடிக்கைகளால் தவிர்க்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் :

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் மாறும்போது அல்லது வக்ர நிலையில் செல்லும்போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது.

ஜனவரி 17 -ம் திகதி சனி கும்ப ராசியில் பிரவேசிக்கவுள்ளார். இதனால் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அதிகரிக்கலாம். உடல்நலம் விஷயத்திலும், அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த காலத்தில், மற்றவர்களை கண்டிப்பதை தவிர்க்கவும். அதே சமயம் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குவதால், அவர்களுக்கும் சிறப்பு கவனம் தேவை. கோபம் மற்றும் ஆணவத்திலிருந்து விலகி இருப்பது நல்லது.

சனிபகவானின் கோபத்தை தவிர்க்க இவற்றை எல்லாம் செய்யலாம் :

  • இந்த காலகட்டத்தில் ​​யாருக்கும் கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.
  • பெண்களை மதிக்கவும்.
  • சனி சாலிசா பாராயணம் செய்வது நன்மை தரும்.
  • சனியின் கோபத்தைத் தவிர்க்க கோளறு பதிக, சனி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யவும்.
  • சனியின் அசுப பலன்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி கோவிலில் தீபம் ஏற்றவும்.
  • உங்களால் முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும்.