இன்று மாலைக்குள் இந்த தீபத்தை ஏற்றி விட்டால், மூன்று கோடி ஏகாதசிகள் வணங்கிய பலனை பெறுவீர்கள்!

மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக நாம் வணங்கி வருகிறோம்.

அந்தவகையில் இன்று சுவர்க்கவாயில் ஏகாதசியாகும். இந்த நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம்.

இந்த விரதத்தை மேற் கொண்டால் மறு பிறவி என்பதே இல்லாமல், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி சொர்க்கத்தை சென்றடைவோம் என்பது நம்ப்பிக்கை. அது மட்டுமின்றி தீராத நோய்கள் தீருவதோடு, சகல செல்வங்களும் கிடைக்கும்.

அத்துடன் இந்த வைகுண்ட ஏகாதசி விரத நாளில் நாம் ஏற்றும் இந்த தீபமானது, மூன்று கோடி ஏகாதசிகள் பெருமாளை வணங்கிய பலனை தருவதோடு, செல்வ வளத்தையும் வாரி வழங்கும் என கூறப்படுகின்றது.

ஏற்றவேண்டிய தீபம்
செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு உங்கள் வீட்டில் பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பெருமாள் படம் இல்லாதவர்கள் லட்சுமி தாயார் படத்திற்கு முன்பாகவும் ஏற்றலாம்.

இந்த தீபம் ஏற்ற இரண்டு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு விளக்கிலும் இரண்டு பஞ்சுத் திரிகளை போட்டு, அத்துடன் ஒரு கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக இடித்து பவுடராக்கி, எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள்.

விளக்கின் மீது துளசி இலையை வைத்து விடுங்கள். தீபம் ஏற்றும் போது நெய்வேத்தியமாக கொஞ்சம் அவல் எடுத்து அதில் வெல்லம் கலந்து அதையும் தீபத்தின் முன் வைத்து விடுங்கள்.

இவையெல்லாம் தயார் செய்து வைத்த பிறகு இரண்டு அகல் விளக்கையும் ஏற்றி உங்கள் குறைகள் யாவும் நீங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த ஒரு நாளில் ஏற்றும் இந்த இரண்டு தீபமானது, நீங்கள் மூன்று கோடி ஏகாதசிகள் பெருமாளை வணங்கிய பலனை கொடுக்கும் என சொல்லப்படுகின்றது.

லட்சுமி தேவி ஆனாவர் பெருமாளின் மார்பில் குடியிருப்பவர். இந்த தீபத்தை பெருமாளுக்கு ஏற்றி வழிபடும் போது பெருமாளின் அனுகிரகத்தோடு லட்சுமி தாயாரின் அருளும் கட்டாயம் கிடைக்கும்.