புத்தாண்டின் முதல் வாரத்தில், ஜனவரி 2-ம் திகதி முதல் 8-ம் திகதி வரையிலான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம்.
2023ம் ஆண்டின் முதல் வாரத்தில், ராசிகள் சொல்லும் முன்னெச்சரிக்கை என்ன? இந்த வார ராசிபலன்கள் யாருக்கு எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ளலாம்…
துலாம்:
பேச்சில் கடுமை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் நிதானமாக இருங்கள். ஆடை அணிகலன்கள் மீதான நாட்டம் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் அதனைத் தவிருங்கள், உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
தன்னம்பிக்கையுடன் இருந்தாலும் தன்னடக்கத்துடன் செயல்படுவது அவசியம்.சோம்பல் அதிகமாக இருக்கும், குடும்பத்தில், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியிடத்தில் மாற்றம் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.
தனுசு:
தனுசு ராசிக்கு பொறுமை குறையும், பேச்சின் தாக்கம் அதிகரிக்கும், இனிப்பான உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். சொத்துக்களால் வருமானம் அதிகரிக்கும், வேலை மாற்றம் சாத்தியமாகும்.
மகரம்:
படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால், தன்னம்பிக்கை குறையலாம். சொத்து பராமரிப்புக்கான செலவுகள் கூடும்.வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு, வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும்.
கும்பம்:
தன்னம்பிக்கை குறையும், ஆனால் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். விருப்பத்திற்கு மாறாக வேலைஅதிகரிப்பு சாத்தியமாகும். பேச்சில் பொறுமையாக இருங்கள், செலவுகள் அதிகரிக்கும்.
மீனம்:
பணவரவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. மனதில் மகிழ்ச்சியான உணர்வுகள் இருக்கும், ஆனாலும் தன்னடக்கத்துடன் இருங்கள்.அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும், தாயுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். வேறு இடத்துக்குச் செல்ல நேரிடலாம், வருமானம் அதிகரிக்கும்