2023ல் 27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தெய்வமும் செய்யவேண்டிய பரிகாரமும்!

கடந்த காலங்களில் கொரோரோ தொற்று, உக்ரைன் போரால் ஏற்பட்ட , பொருளாதார நெருக்கடி என என உலக மக்கள் தவித்துவரும் நிலையில் பிறந்துள்ள 2023 புத்தாண்டு அனைவருக்கும் நல்லதாக அமையவேண்டும் என்பதே பலரின் பிராத்தனையாக உள்ளது.

ஜோதிட சாஸ்திரங்களின் படி ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 17ல் கும்ப ராசியில் சனிப் பெயர்ச்சி வருகின்றது.

அதேபோல , ஆண்டின் நடுவில் ஏப்ரல் 22ல் மீன ராசியில் குரு பெயர்ச்சி, பிற்பகுதியில் அக்டோபர் 30ல் ராகு – கேது பெயர்ச்சி என நடக்கிறது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் 27 நட்சத்திரகாரர்கள் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் கஸ்ரங்கள் நீங்கும் என்பதையும் செய்யவேண்டிய பரிகாரங்களையும் பார்க்கலாம்.

அஸ்வினி –
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தினமும் விநாயகர் ஆலயம் சென்று வழிபடவும். கொள்ளு தானம் கொடுக்க வேண்டும்.

பரணி –
பரணி நட்சத்திரத்தினர் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அவரை தானம் கொடுக்க வேண்டும்.

கார்த்திகை –
கார்த்திகை நட்சத்திரத்தினர் ஒவ்வொரு மாதமும் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். கோதுமை தானம் கொடுப்பது நற்பலனைத் தரும்.

ரோகிணி –
ரோகிணி நட்சத்திரத்தினர் அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று வருவதும், பச்சரிசி தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

மிருகசீரிஷம் –
மிருகசீரிடம் நட்சத்திரத்தினர் வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபட வேண்டும். துவரை தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

திருவாதிரை –
திருவாதிரை நட்சத்திரத்தினர் சனிக்கிழமை தோறும் துர்க்கை வழிபாடு செய்ய வேண்டும். உளுந்து தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

புனர்பூசம் –
புனர்பூசம் நட்சத்திரத்தினர் வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். கடலை தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

பூசம் –
பூசம் நட்சத்திரத்தினர் சனிக்கிழமை தோறும் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும். உளுந்து தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

ஆயில்யம் –
ஆயில்யம் நட்சத்திரத்தினர் புதன் கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வது நல்லது. பச்சைப் பயறு தானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

பூரம் –
பூரம் நட்சத்திரத்தினர் வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். துவரை தானம் கொடுக்க வேண்டும்.

உத்திரம் –
உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சிவாலய வழிபாடும், அங்குள்ள சூரியனை வழிபட வேண்டும். கோதுமை தானம் கொடுக்க வேண்டும்.

அஸ்தம் –
அஸ்தம் நட்சத்திரகாரர்கள் திங்கட் கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வரவும். பச்சரிசி தானம் கொடுக்க வேண்டும்.

சித்திரை –
சித்திரை நட்சத்திரத்தினர் அருகில் உள்ள சிவாலய வழிபாடு செய்வதும். அங்குள்ள முருகன் சன்னதியில் வழிபாடு செய்வதும் துவரை தானம் கொடுப்பது நல்லது.

சுவாதி –
சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சனிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் உள்ள துர்கை அம்மன் வழிபாடு செய்து வரவும். உளுந்து தானம் கொடுக்க வேண்டும்.

விசாகம் –
விசாக நட்சத்திரத்தினர் சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது. கொண்டைக் கடலை தானம் கொடுப்பது நல்லது.

அனுஷம் –
அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் உள்ள நவகிரக வழிபாடு செய்வது நல்லது. அவரை தானம் கொடுக்கவும்.

கேட்டை –
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன் கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது நல்லது. பச்சைப் பயறு தானம் கொடுக்கவும்.

மூலம் –
மூலம் நட்சத்திரத்தினர் ஞாயிற்றுக் கிழமைகளில் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று வழிபடவும். கொள்ளு தானம் கொடுக்க வேண்டும்.

பூராடம் –
பூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். அவரை தானம் கொடுக்க வேண்டும்.

உத்திராடம் –
உத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் சிவன் கோவிலில் உள்ள சூரிய பகவானை வணங்க வேண்டும். கோதுமை தானம் கொடுக்க வேண்டும்.

திருவோணம் –
திருவோணம் நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திங்கட்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவில் வழிபாடு செய்வதும். பச்சரிசி தானம் கொடுப்பதும் நற்பலனைத் தரும்.

அவிட்டம் –
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவாலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும். துவரை தானம் கொடுக்க வேண்டும்.

சதயம் –
சதயம் நட்சத்திரக்காரர்கள் சனிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபடவும். உளுந்து தானம் கொடுக்க வேண்டும்.

பூரட்டாதி –
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வியாழக் கிழமைகளில் சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்யவும். கொண்டைக் கடலை தானம் கொடுக்க வேண்டும்.

உத்திரட்டாதி –
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சனிக் கிழமைகளில் நவகிரகங்களை வழிபாடு செய்யவும். கருப்பட்டி கலந்த எள்ளு தானம் கொடுக்க வேண்டும்.

ரேவதி –
ரேவதி நட்சத்திரக்காரர்கள் சனிக் கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் செல்ல வேண்டும். பச்சைப் பயறு தானம் கொடுக்க வேண்டும்.