சனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு இனி இதெல்லாம் நடக்கும்! முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

புது ஆண்டின் சனிப்பெயர்ச்சியால் மகர ராசிக்கு பாத சனி தொடங்க இருப்பதால், இனி கவனமாக இருக்க வேண்டும். என்னென்ன பிரச்சனைகள் வரும், முன்னெச்சரிக்கையாக இருப்பது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மாதம் 4-ம் திகதி புதன் பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். 13-ம் திகதி சூரிய பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். 14 ஆம் திகதி சுக்கிரன் பகவான் கும்பத்திலிருந்து மீனம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

அதேபோல், 21 ஆம் திகதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், பெப்ரவரி மாதத்தில் மகர ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

ஜனவரி 17 ஆம் திகதி நடைபெற்ற சனிப்பெயர்ச்சியால், மகர ராசிக்கு பாத சனி தொடங்கியிருக்கிறது.

இதனால், இனி நிவர்த்தி நிறைந்த காலக்கட்டமாக இருக்கும். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் சருமம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

மேலும், இந்த மாதத்தில் சூரிய பகவான் உங்க ராசிக்கு சுய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சுப விரைய செலவுகள் வந்துக்கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல், புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், தண்ட செலவுகளும் அடுக்கடுக்காக வந்துக்கொண்டே இருக்கும்.

வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் இந்த மாதத்தில் வாக்குவாதம் நடந்துக்கொண்டே இருக்கும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே இருக்கும்.

இருப்பினும், செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு இருக்கும். சிலருக்கு செல்வந்தர்களுடன் புதிய நட்பு உண்டாகும். இளைய சகோதர, சகோதர்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒரு சிலருக்கு விலையுயர்ந்த பொருட்கள் திருடப்போக வாய்ப்புள்ளது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும், பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

மனதிற்குள் இருந்தவந்த சஞ்சலங்கள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றி பெரும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

தொழில் வியாபாரத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் பணஉதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிலர் கடன் பிரச்சனையால் வருத்தத்தில் இருப்பீர்கள், அவை அனைத்தை அடைத்து மனதில் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

காதலித்துக் கொண்டிருக்கும் மகர ராசி அன்பர்களுக்கு பெற்றோர்களின் சம்பதத்துடன் திருமணம் நடைபெறும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5

சந்திராஷ்டம நாள்: 7, 8

பரிகாரம்: தினசரி மகாகணபதி வழிபாடு செய்துவருவது வாழ்க்கையில் நிம்மதியை கொடுக்கும்.