தை மாத வெள்ளிக் கிழமை இதை மட்டும் செய்யுங்கள்; வீட்டில் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்திருக்கும்!

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாள். இந்த தை மாத வெள்ளிக்கிழமையில் செய்யப்படும் ஒவ்வொரு பூஜையும் தாயாரின் அருளும், ஆசியும் நமக்கு பல மடங்கு பெற்றுத் தரும்.

இந்த நாளில் நாம் அவருக்கு செய்யும் இந்த பூஜையும், அதன் பிறகு அதைக் கொண்டு நிலை வாசலில் செய்யும் பூஜையும் நம் குடும்பத்தை எல்லா செல்வ வளத்துடன், செழிப்புடனும் வாழவைப்பாள் மகாலட்சுமி.

என்ன செய்ய வேண்டும்
வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி அன்றைய தின வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றிய பிறகு மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

குங்கும அர்ச்சனை செய்யும் முன் வீட்டில் மகாலட்சுமி தாயார் சிலை, லஷ்மி எந்திரம் அல்லது திரு உருவப்படம் இவற்றில் எது இருந்தாலும் அதை பூஜை அறையில் பிரதானமாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கிண்ணத்தில் குங்குமம் முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள். குங்குமத்திற்கு பதிலாக திரிசனம் இருந்தால் மிக மிக விசேஷம்.

விளகேற்றுதல்

பூஜை அறையில் மகாலட்சுமி படத்திற்கு முன் விளக்கு ஏற்ற வேண்டும். எந்த விளக்காக இருந்தாலும் ஏற்றலாம். அதில் பசு நெய், நல்லெண்ணெய், அல்லது கடுகு எண்ணெய் மூன்றில் ஏதாவது ஒரு எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக ஒரு கிண்ணத்தில் வாழைப்பழம் வைத்து அதில் கொஞ்சம் தேன் ஊற்றி வைக்க வேண்டும். பூஜை முறை இத்துடன் ஒரு நெல்லிக்கனியும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

நெல்லிக்கனியை மாலையாக கோர்த்து கூட மகாலட்சுமி தாயாருக்கு போடலாம்.

இது மேலும் விசேஷத்தை கொடுக்கும். இவையெல்லாம் தயார் செய்த பிறகு மகாலட்சுமி தாயார் படத்தின் முன் அமர்ந்து நம்முடைய வேண்டுதல்களை எல்லாம் அவரிடம் மனதார ஒப்படைத்து, இந்த குங்குமத்தை மோதிர விரல், கட்டை விரல் இரண்டு விரல்களில் மட்டும் எடுத்து மகாலட்சுமி தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.

அப்படி செய்யும் போது அவரின் 108 நாமத்தை சொல்லி நாம அர்ச்சனை செய்ய வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் ஓம் மகா லஷ்மியே நமக என்ற நாமத்தை 108 முறை சொல்லியும் அர்ச்சனை செய்யலாம்.

ஸ்வஸ்திக் சின்னம்

நாம அர்ச்சனை முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டிய பிறகு, நீங்கள் பூஜை செய்த குங்குமத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து அதில் தேன் விட்டு குழைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு நிலை வாசல் இந்த குங்குமத்தை வைத்து ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து விட வேண்டும். அதன் பிறகு அந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கும் கற்பூர தீபாராதனை காட்டிய பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

பூஜை செய்த குங்குமத்தை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து தினமும் இதையே நெற்றிக்கு பயன்படுத்தி வரலாம்.

வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதை கொடுக்கும் போது இதன் பலன் பல மடங்கு பெருகும்.

வாசலில் வைத்திருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னமானது, மகாலட்சுமி தாயாரை நிரந்தரமாக நம் வீட்டில் தங்க வைத்து செல்வ வளத்தை தரும் என்றும் சொல்லப்படுகிறது.