நினைப்பதெல்லாம் கைகூடும் பேர் அதிர்ஷ்டம் – இன்பத்தில் மூழ்கப்போகும் ராசியினர் இன்றைய ராசிபலன்

மங்கலகரமான சுபகிருது வருடம் தை மாதம் 19ஆம் நாள் வியாழக்கிழமை ( 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி)

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. குடும்பத்தில் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் வரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கண்மூடித்தனமாக செயல்பட வேண்டாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்வு நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. உள்ளத்தில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்கள் பகை அதிகரிக்கும்.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உத்வேகத்துடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் இடையூறுகள் வரலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபத்தை காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை சிந்தனை தேவை.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விழிப்புணர்வுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கிறது. உடன் இருப்பவர்களே உங்களை ஏமாற்ற வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் லாபம் பெறுக விடா முயற்சி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சில சங்கடங்கள் வரக்கூடும் கவனம் வேண்டும். தேவையற்ற நபர்களின் அறிமுகங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் சரியாக இருப்பது நல்லது. மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். சுய தொழிலில் உங்களுடைய நயமான பேச்சு வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு கூடுதலாக தேவை.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நட்பு வட்டம் விரிவடைய வாய்ப்புகள் கிடைக்கும். மன இறுக்கத்தில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்தநிலை காணப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் வரும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. பயணங்கள் மன திருப்தியை கொடுக்கும். உங்களுடைய கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்கக்கூடும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் யோசிக்காமல் செய்வதால் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் காலதாமதம் செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொடர் சறுக்கல்கள் வரலாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நல்ல நிகழ்வுகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய சிந்தனை உதவிகரமாக இருக்கப் போகிறது. அனுபவம் கை கொடுக்கும் வண்ணம் அமையும். சுய தொழிலில் எதிர்பாராத லாபம் காணலாம். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. இதுவரை இழுபறியாக இருந்த வேலை ஒன்று முடிவுக்கு வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பழைய நினைவுகளை அசை போட்டு பார்ப்பீர்கள்.