பொதுவாக ராசிப்பலன்கள் கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
இதன்படி, 2023 ஜனவரி 17ம் திகதி இருந்து ஜனவரி 30ம் திகதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமானார். இதன் பின்னர் சனி பகவான் மார்ச் 09ம் திகதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார்.
இவ்வாறு இந்த வருடம் சனி பகவான் கும்ப ராசியில் ருத்திர தாண்டவம் ஆடப்போகிறார். இதனால் கும்ப ராசிக்காரர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.
மேலும் புதிய தொழில் துவங்கும் ராசிக்காரர்கள் சற்று நல்ல நேரத்தை பார்த்து ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய தொழில் தோல்வி சென்று முடிவடையும்.
அந்த வகையில் கும்ப போன்று முக்கியமான ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக தொடர்ந்து பார்க்கலாம்.
அதிஷ்டத்தில் குளிக்கும் ராசிக்காரர்கள்
1.சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மார்ச் 09 முதல் நல்ல பலனைத் தரக்கூடியதாய் இருக்கும். நீண்ட காலமாக திருமணமாகாமல் இருப்பவர்கள் இந்த ஆண்டு திருமணத்தை வேலைகளை பார்க்கலாம். இந்த வருடம் ஒரு திருமண வருடம் என்பதால் உங்களுக்கான துணை உங்களை தேடி வரப்போகிறது.
2. ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அதிர்ஷ்டம் கிடைக்கும். இதனால் கவலை இன்றி சில காரியங்களில் இறங்கலாம். இறைவனின் அருள் உங்களை சுற்றி இருந்துக் கொண்டே இருக்கும். மேலும் வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கட்டாயம் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தால் பலன் நிச்சயம்.
3. துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று முதல் உங்கள் வீடுகளில் நல்லக்காரியங்களில் இறங்கலாம். இவர்களுக்கான சனி பகவானின் ஆதிக்கம் கூடிய விரைவில் விலகும். இதனால் நீங்கள் திட்டமிட்டுள்ள அனைத்தும் நிறைவேற நேரங்கள் கூடி வந்துள்ளது.
4. மகரம்
மகர ராசியில் ஜொலிக்கும் நண்பர்களுக்கு இந்த வருடம் மகிழ்ச்சி நிறைந்து இனிமையாக இருக்கும். இதனால் இந்த வருடம் நீங்கள் நினைக்கும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். மேலும் கடன் விவகாரங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து வெளிநாட்டு காரியங்கள் இறங்கினால் பலத்த வெற்றியை பார்க்கலாம்.