அதிர்ஷ்டம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள் : அதிலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு..! இன்றைய ராசி பலன்கள்

மங்கலகரமான சுபகிருது வருடம் மாசி மாதம் 10ஆம் நாள் புதன்கிழமை (2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி)

இன்றைய ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன.

இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும். இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் தொலைதூர ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் உடல் நலம் சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலை இருக்கும். பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் உறவுகளின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். சிலர் வெளியூர் பிரயாணங்களை மேற்கொள்வார்கள்.

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய காரியங்களிலும் ஈடப்பட வேண்டாம் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. சிலருக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். சிலருக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் அதிக ஈடுபாடு உண்டாகும் விஐபி க்களின் அறிமுகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களின் ஆதரவும் அதனால் ஆதாயமும் உண்டாகும். சிலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளி போடலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் புதிய வீடு வாகனம் வாங்குகின்ற அமைப்பு ஏற்படும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் சூழல் ஏற்படும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாராத பணவரவு ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். பெண்கள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும் . தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். பணியிடங்களில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.