கல்வி அறிவு, நுண்ணறிவு தரக்கூடிய புதன் பகவான் மார்ச் 31ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.54 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏற்கனவே அங்கு சஞ்சரிக்கும் ராகு மற்றும் சுக்கிரனுடன் சேர உள்ளார்.
சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை காரணமாக லக்ஷ்மி நாராயண யோக பலன் உருவாகக்கூடிய கிரக நிலை இருப்பினும் அங்கு ராகுவுடன் சேர உள்ளார்.
மார்ச் 31ம் திகதி முதல் ஏப்ரல் 21ம் திகதி வரை மேஷத்தில் சஞ்சரிக்கும் நிலையில் அதன் பின்னர் புதன் பகவான் வக்ர நிலையாக பின்னோக்கி நகர உள்ளார்.
அதுவரை இந்த மூன்று கிரக கூட்டணி சில ராசியினருக்கு தொழில், வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு இந்த புதன் சஞ்சாரமும் 3 கிரகங்களின் சேர்க்கையின் போது செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த நேரத்தில் உங்கள் வருமானம் நன்றாக இருந்தாலும் செலவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
திட்டமிட்டதை விட அதிகம் செலவிட நேரிடும்.முதலீடு விஷயங்களில் புத்திசாலித்தனமாகச் செயல்படவும்.
வேலை வியாபாரத்தில் உங்களின் செயல்பாடு நன்றாக இருக்கும். சில தேவையற்ற, அலைச்சலைத் தரக்கூடிய பயணங்கள் ஏற்படலாம்.
ரிஷப ராசி
ராசிக்கு 12ல் மூன்று கிரக கூட்டணி நடக்கிறது. உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் விரயத்தில் இருப்பதால் நீங்கள் எந்த ஒரு பணப்பரிவர்த்தனை செய்தாலும் அதில் கவனமாக இருக்கவும்.
நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும்.
பணியிடத்தில் சக ஊழியர்களாலும், அதிகாரிகளாலும் பிரச்சனைகள் வரலாம். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்வதும், மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவதும் நல்லது. வியாபாரிகள் திட்டமிட்டு வேலை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி ராசி
கன்னி ராசி அதிபதி புதன் ராகுவுடன் அஷ்டம ஸ்தானத்தில் சேர உள்ளார். அதனால் எந்த ஒரு வேலை, முதலீடு என எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.
குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மேன்மையைத் தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.
எதிர்பாராத செலவால் கடன் வாங்க நேரிடும். பயணத்தின் போது கவனம் தேவை. உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எந்தவிதமான விவாதத்தையும் தவிர்க்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்கு நோய், எதிரி ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு சேர்க்கை நடக்க உள்ளது. இதனால் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். நிதி விஷயங்களில் ஏற்ற தாழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளது. கடன் வாங்கும் சூழல் உருவாகலாம்.
பணியிடத்தில் அதிகாரிகளால் மன உளைச்சல் சந்திக்க நேரிடும்.
வேலையை மாற்ற திட்டமிட்டுள்ளவர்கள் உங்கள் திட்டத்தில் கவனம் தேவை. ஒத்தி வைக்கவும். சொத்து சம்பந்தமாக சகோதரர்களுக்கிடையே தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
கும்ப ராசி
கும்ப ராசிக்கு இந்த காலத்தில் வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீங்கள் ஏமாற்றவோ, ஏமாறவோ வேண்டாம்.
தொழில், வியாபாரத்தில் எதிரிகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
உங்கள் வேலையில் நீங்கள் சரியான திட்டமிடலும், தெளிவான முடிவுகளும் எடுப்பது அவசியம். குடும்பத்தில் குறிப்பாக தாயுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனால் குடும்ப சூழலில் குழப்பம் உண்டாகலாம். உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.