பல ஆண்டுகளின் பின் உருவாகும் ராஜயோகம்!! மூன்று ராசியினரை தேடிவரும் அதிர்ஷ்டம்..!

மங்கலகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 09 ஆம் நாள் வியாழக்கிழமை (2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி)

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் காலதாமதம் ஆக வாய்ப்பு உண்டு எனவே பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுயமாக சிந்திக்க கூடிய வாய்ப்புகளை விளக்க நேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்ததை செய்வீர்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் லாபம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அமைதி குறைவு உண்டாக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சொந்த செலவில் சூனியத்தை வைத்துக் கொள்ளாதீர்கள். எங்கும் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தொடர் அலைச்சலால் சோர்வு தட்டும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தனித்தன்மையை இழக்காமல் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமையில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எதிர்த்து தன்னம்பிக்கையுடன் போராடுவீர்கள். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேர்மைக்கு இடையூறுகள் வர வாய்ப்புகள் உண்டு. கடமையில் கூடுதல் பொறுப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சவால்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. மற்றவர்களுடன் பொறாமையற்ற போட்டி உணர்வுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய விருப்பமான விஷயங்களை விட்டுக் கொடுக்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் செலவுகள் வர வாய்ப்பு உண்டு எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்திரங்களுக்கு நிம்மதி இருக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. முகத்தில் ஒரு புத்துணர்வு காணப்படும். குடும்பத்தில் எதிர்பாராத நபர்களின் வருகை நன்மை தரும் வகையில் இருக்கும். சுய தொழிலில் ஏற்றம் காணக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமான அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். எதிலும் வெற்றி காணக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவில் சந்தேகம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தேவையில்லாத எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்ப விஷயங்களை அவசர முடிவுகள் வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சமூக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம்.