மீன ராசியில் குரு அஸ்தமனம்; சிக்கலில் நான்கு ராசியினர்! யாருக்கெல்லாம் விபரீத யோகம் தெரியுமா..!

ஜோதிடத்தில் கிரகங்கள் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, சில சமயங்களில் அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். இப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் மங்களகரமான கிரகமான குரு மார்ச் 28 ஆம் திகதி தனது சொந்த ராசியான மீன ராசியில் அஸ்தமனமானார். இந்த அஸ்தமன நிலையில் குரு பகவான் ஏப்ரல் 27 ஆம் தேதி வரை இருந்து, பின் உதயமாவார்.

அஸ்தமன நிலையில் எந்த கிரகம் இருந்தாலும், அந்த கிரகம் வலுவிழந்து இருக்கும் மற்றும் அந்த கிரகத்தால் கிடைக்கும் நற்பலன்களும் தடைபடும். குருவின் அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்கள் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். பணிபுரிபவர்கள் மட்டுமின்றி, வியாபாரிகளும் இக்காலகட்டத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். இக்காலத்தில் வாக்குவாதங்களில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறது. கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலத்தில் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

கூட்டு வணிகம் செய்து வந்தால், இக்காலத்தில் சிறு விஷயங்களுக்காக பெரிய வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், உறவுகளில் பிரிவினைகள் ஏற்படக்கூடும்.

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலத்தில் அதிகமாக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் குரு அஸ்தமனமாகிறார். இதனால் இக்காலகட்டத்தல் கும்ப ராசிக்காரர்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். எதை பேசினாலும், இக்காலத்தில் யோசித்து பேச வேண்டும்.

நண்பர்கள் அல்லது உறவினர்களுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தன்னம்பிக்கை சற்று குறையும். முதலீடுகளை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.