நவகிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 28 நாட்கள் வரை இருப்பார்.
தற்போது புத்திகாரகனான புதன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்த புதன் ஏப்ரல் 21 ஆம் திகதி மேஷ ராசியில் வக்ரமாகவுள்ளார்.
அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். புதன் வக்ரமாவதால் புதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் அனைத்தும் தடைப்படும்.
புதன் இந்த வக்ர நிலையில் மே 15 ஆம் திகதி வரை இருந்து பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.
புதன் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், நான்கு ராசிக்காரர்கள் புதன் வக்ரமாவதால் நிறைய கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கவுள்ளார்கள்.
இப்போது மேஷ ராசியில் வக்ரமாகும் புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார்.இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இக்காலத்தில் முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
இக்காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைகள் ஏற்படலாம்.
பணிபுரிபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில் இக்காலத்தில் உங்கள் வேலையில் சில தடைகளை சந்திக்கலாம்.
கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் கடக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் பல இடையூறுகளை சந்திக்க நேரிடும்.
இந்த காலத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்து அமைதியற்று இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரியும் மகர ராசிக்காரர்கள் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
உங்களின் செலவுகள் வரவை விட அதிகமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். இக்காலத்தில் தேவையில்லாமல் கோபப்படுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
இல்லாவிட்டால் அந்த கோபமே உங்கள் மன உளைச்சலை உண்டாக்கும்.