உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் : 5 ராசிகளின் வாழ்க்கையில் மகத்தான வெற்றி! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

கும்ப ராசியில் எதிர்வரும் (07.03.2024) ம் திகதி பெயர்ச்சி ஆன சுக்கிரனுடன், ஆற்றல், வேகத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் எதிர்வரும் (15.03.2024) ம் திகதி சேர உள்ளார்.

இதனால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் சில ராசியினருக்கு வியாபாரம் பெருகும், பண வருவாய் கூடும். கும்ப ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சரித்து வரும் சனி பகவானுடன், சுக்கிரன் சேர்ந்துள்ளார்.

அவருடன் மார்ச் 15ம் தேதி செவ்வாய் பகவானும் சேர உள்ளார்.

இதனால் உருவாகக்கூடிய மகாலட்சுமி ராஜயோகத்தால் சில ராசியனருக்கு உங்களின் தொழில், வேலை வாய்ப்புகள் பிரகாசமாகும். பண வரவு அதிகரிக்க உள்ள ராசிகளை பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் சேர்க்கையானது, வண்ணமயமான பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.

இந்த கிரகங்களின் சேர்க்கையால் மற்றவர்களிடம் சிக்கியுள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழில், வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற வருவாயும், முன்னேற்றமும் கிடைக்கும்.

குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வாழ்வில் சுக்கிரன்-செவ்வாய் இணைவின் காரணமாக மிகவும் நல்ல பலனைத் தரும். உங்கள் வியாபாரம் பன்மடங்கு வளரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் பயன் தருவதாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசி அதிபதியான சுக்கிரனும், செவ்வாய் இணைவும் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சிறப்பாக அமைவதால், உங்கள் வாழ்க்கையில் இருக்கக்குடிய தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் லாபம் பல மடங்கு உயரும். நண்பர்களிடமிருந்து பெரிய உதவிகள் கிடைக்கும்.

உங்களுக்கு தொழில் வாய்ப்புகள் அமையும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு சுக்கிரனும், செவ்வாயும் சேரக்கூடிய நிகழ்வானது உங்களின் நிதிநிலையை முன்னேற்றக்கூடியதாகவும், வியாபாரம் பெருகும் வாய்ப்புள்ளது.

தொழிலதிபர்களுக்கு, புதிய வாய்ப்புகளால் வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு மிகப்பெரிய நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

வணிகம் தொடர்பான திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வண்டி, வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம்.

உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும், பண முதலீடுகள் வெற்றியைத் தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு, இந்த சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவானது, தொழில் தொடர்பான சில நல்ல செய்திகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலைகள் செய்து முடிக்க முடியும்.

கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்க நல்ல நேரம். உங்களின் செல்வம் பெருகும்.

உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்பீர்கள். பணத்தையும் சேமிக்க முடியும்.

திருமணம் சார்ந்த விஷயத்தில் உறவு சிறப்பாக இருக்கும். தொழிலில் திருப்தி அடைவீர்கள்.