மேஷத்தில் புதன்… ராஜயோகம் பெறப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா? உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

பொதுவாகவே கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையயில் மார்ச் 26 ஆம் திகதி புதன் மேஷ ராசிக்கு இடம்பெயர்கின்றார். அதிகாலை 3.05 மணிக்கு மேஷ ராசிக்கு இடம்பெயரும் புதன் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிவரை மேஷ ராசியில் தங்கியிருப்பார்.

இந்த இடமாற்றம் குறிப்பிட்ட சில ராசியினருக்கு ராஜயோகத்தை கொடுக்கப்போகின்றது. அவ்வாறு பலனடையப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
புதன் இந்த ராசியின் லக்ன வீட்டில் அமைந்திருப்பதால் மேஷ ராசியினருக்கு ராஜ வாழ்க்கை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். துணையின் ஆதரவு கிடைக்கும்.

பச்சை நிறத்தில் ஆடை அணிவதை இந்த காலப்பகுதியில் தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு எதிர்பாராத பணவரவும் கிட்டும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கிடைக்கும்.

புதனின் பலனைப் முழுமையாக பெற கோயிலுக்கு மண் பாண்டம் தானம் செய்வது சிறப்பு.

மிதுனம்

மிதுன ராசியினரின் விருப்பங்கள் அனைத்தும் இந்த காலப்பதுதியில் நிறைவேறும். கல்வி கற்பவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு பணப்புலக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உவாதைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாழ்வில் நீண்ட நாளாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மீனம்

மீன ராசியினருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரைத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.