தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையில் நீங்கள் மேலும் மேலும் முன்னேறி செல்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வங்கி கணக்கு தொடங்கலாம், புதுசாக சேமிப்பு திட்டங்களை தொடங்கலாம், சீட்டு போடலாம், இதுபோன்ற எதிர்காலத்திற்கு தேவையான நல்ல காரியங்களை இன்று செய்யுங்கள். புதிய பொருளை வாங்குவதற்கு யோகமும் என்று இருக்கிறது. செய்யும் வேலை தொழில் எல்லாம் இன்று நல்லபடியாக செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அமைதியாக உங்களை ஒரு வேலை கூட செய்ய விட மாட்டார்கள். கூடவே இரண்டு பேர் இருந்து உங்களை வேலை செய்ய விடாமல் தடுப்பார்கள். உஷாரா இருந்துக்கோங்க. யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உயர் அதிகாரிகளை சந்தித்து பேசும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கவும். முன் கோபப்படாதீங்க.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாமல் உங்களுடைய வேலையை செய்வீங்க. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு நிதி நிலைமையை சீர்படும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து மன நிம்மதி அடைப்பீர்கள். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இரவு நல்ல தூக்கம் வரும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் இரக்க குணத்துடன் நடந்து கொள்வீர்கள். யாராவது வந்து உங்களிடம் கஷ்டத்தை சொல்லி உதவி என்று கேட்டால் அதை உடனே செய்யப் போய்ருவீங்க. இதனால் உங்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் உயரும். நான்கு பேர் மதிக்கத்தக்க வகையில் சில காரியங்கள் உங்கள் கையால் நடைபெறும். அது கடவுள் இன்று உங்களுக்கு கொடுத்த பாக்கியம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. மனதிற்குள் டென்ஷன் இருக்கும். ஆனால் அதை வெளி ஆட்களிடம் காட்ட முடியாது. உள்ளுக்குள்ளேயே வைத்து புலம்ப போறீங்க. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். கவலைப்படாதீங்க இந்த நாள் இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்க மனதிற்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிடுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சட்டுனு கோபம் வரும். யார் எதை பேசினாலும் பதிலுக்கு எரிந்து விழப் போகிறீர்கள். இதனால் உங்களை பார்த்து பேசவே சில பேர் பயப்படுவார்கள். இதனால் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். உங்களுக்கு நல்லது செய்ய வந்தவங்க கூட அந்த நல்லதை உங்களிடம் சொல்லாமலே போயிருவாங்க. முன் கோபத்தை குறைப்பது தான் நல்லது. ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும் நிறைய தண்ணீர் குடிங்க. உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுங்க.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கப் போகின்றது. வேலையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து தேடி வரும். சம்பள உயர்வு பதவி உயர்வும் தேடி வரும். நீங்கள் முயற்சிகளை செய்திருக்க மாட்டீங்க. ஆனால் நல்லது தானாக நடக்கக்கூடிய நாள் இது. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றவர்கள் சொல்லக்கூடிய பேச்சைக் கேட்டு நடக்கவும். அடம் பிடித்து நீங்களே தானா எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கப் போகின்றது. ஆன்மீகத்தை தேடி செல்வீர்கள். இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் பாட்னர்கள் மூலம் சண்டை சச்சரவுகள் வரலாம். கணக்கு வழக்குகளை சரி பார்க்கும்போது கூடுதல் கவனத்தோடு இருங்கள். கூடுமானவரை இன்று கடன் வாங்காதீங்க, கடன் கொடுக்காதீங்க.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலட்சியமான போக்கோடு இருப்பீர்கள். இதனால் சின்ன சின்ன இழப்புகள் ஏற்படும். வீடு வரை வந்த வாய்ப்புகள் கையை விட்டு செல்லும். வந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு பின்பு புலம்பினால் எந்த பிரயோஜனமும் கிடையாது.‌ பண கஷ்டம் தீர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகமாக சம்பாதிப்பதற்கு உண்டான வழியை தேட வேண்டும். மேலும் மேலும் கடன் வாங்கி கஷ்டப்படாதீங்க பெரியவர்கள் ஆலோசனைப்படி கேட்டு நடப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று தப்பு தப்பான முடிவை எடுப்பீங்க. யோசிக்காமல் நீங்கள் அதிரடியாக செய்யக்கூடிய காரியங்கள் உங்களுக்கே எதிராக திரும்பிவிடும். இன்று நிதானமாக சிந்திப்பது, பிரச்சனைகளை தவிர்க்கும். அனுபவசாலிகள் புத்திசாலிகள் சொல்லக்கூடிய வார்த்தைகளை நிதானமாக கேட்டுக் கொள்ளவும். எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று விதாண்டா வாதம் பேச வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதி நிலைமை சீராகும். எதிர்பாராத பண வரவு மன அமைதியை கொடுக்கும். நீண்ட நாள் பண சிக்கலில் இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது. வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். என்ன தான் இருந்தாலும் நீங்கள் செலவுகளை கொஞ்சம் குறைக்க வேண்டும். கடன் வாங்கக்கூடிய பழக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.