வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இந்த இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால் போதும்!

வாஸ்து சாஸ்திரத்தில் திசை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நெருப்பு, நீர், காற்று, வானம் மற்றும் பூமிக்கு தனித்தனி திசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து கூறுகளும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திசைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அது சரியாக இருந்தால் மட்டுமே நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.

வாஸ்து படி, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நீர் பாத்திரங்களை வைப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் தண்ணீர் தொட்டிகளையும் வைக்கலாம்.

குறிப்பிட்ட திசையில் வைக்கலாம் என்றால் வைக்கக் கூடாத இடமும் இருக்கிறது.

அந்தவகையில் வீட்டில் எந்த இடத்தில் தண்ணீரை வைக்கக் கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

எந்த இடத்தில் வைக்கலாம்?
நீங்கள் ஒரு கட்டிடம் கட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் வாஸ்து விதிகளை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக வீட்டில் தண்ணீர் தொட்டி இருக்கும் இடம். அந்த இடத்தை வாஸ்து படி வைக்க வேண்டும்.

ஏனெனில் வீட்டில் தண்ணீர் வைக்கும் இடம் வீட்டின் உறுப்பினர்களுடன் தொடர்புடையது.

தண்ணீரை சரியான இடத்தில் வைக்காவிட்டால், நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை சரியான இடத்தில் வைத்திருந்தால், அந்த நபர் சுப பலன்களையும் பெறுவார் என வாஸ்த்து சாஸ்த்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் தண்ணீர் இருக்கும் இடம் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி எப்போதும் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் கட்டப்பட வேண்டும்.

குழாயிலிருந்து நீர் சொட்டுவது அபசகுணமான செயலாகவும் கருதப்படுகிறது. அப்படி சொட்டிக் கொண்டு இருந்தால் வீட்டில் வறுமைக்கு வழிவகுக்கும் மற்றும் பட்டினிக்கு கூட வழிவகுக்கும்.

மேலும், வீட்டில் குளியலறை அறை கிழக்கு திசையில் இருக்கக்கூடாது. அதையும் மீறி இருந்தால் அது மனநல பிரச்சினையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.