2024 ஏப்ரல் மாத ராசி பலன்.. ராஜயோகத்தை பெறப்போகும் ராயினர் யார் யார்னு தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சமடைகின்றன. மேஷ ராசியில் சூரியனும், மீனம் ராசியில் சுக்கிரனும் உச்சமடைகின்றனர்.

புதன் மீனத்தில் நீசமடைகிறார் கும்பம் ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்கிறது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இந்த கிரக மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியினருக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் விடயத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும்.வேலை தேடுவோருக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும்.

ரிஷபம்

ஏப்ரல் மாதம் நடைபெறும் இந்த கிரகங்களின் மாற்றம் ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும். இவர்கள் குடும்ப வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுகள் வந்து சேரும்.

சிம்மம்

ஏப்ரல் மாதத்தில் சிம்ம ராசியினருக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

ஏப்ரல் மாதத்தில் முழுவதும் விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் வாய்ப்பு இருக்கின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நண்பர்களால் உதவி கிட்டும். தொழில் விடயத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த மாதம் பல நன்மைகளை கொடுக்கப்போகின்றது. வேலைவாய்ப்பு அமையும். நண்பர்கள் மூலம் வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும்.

எதிர்பாராத நல்ல விடயங்கள் நடக்கும்.நிதி நிலைமை சீராக இருக்கும். வாழ்வில் பிரச்சினையாக இருந்த சில விடயங்களுக்கு முடிவு உண்டாகும்.

மீனம்

ஏப்ரல் மாதம் முழுவதும் மீன ராசியினருக்கு நேர்மறையான ஆற்றல்கள் மேம்படும். நிதி விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்டிகொடுக்கும் என்றே சொல்லலாம்.