தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாகும்.

அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம், திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சுட கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். உங்களை ஜெய்ப்பதற்கு எவ்வளவுதான் போராடினாலும், எதிரொலி தோற்றுப் போடக்கூடிய சூழ்நிலையே உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு சிம்ம சொப்பனாக இருப்பவர்களை எல்லாம் இன்று தூக்கிப் போட்டு பந்தாடலாம். ஒரு முதலாளித்துவமும் திமிரு தனமும் உங்களிடத்தில் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எல்லா விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் ஏற்பட்ட முடக்கங்கள் எல்லாம் சரியாகி முயற்சிகள் முன்னேற்ற பாதையில் செல்லும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனதுக்கு இதமான நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பழைய காதலியை சந்திக்கலாம். பழைய நண்பர்களாக இருக்கலாம். பழைய உறவுகளாக கூட இருக்கலாம். யாரோ ஒருவர் உங்களிடம் பேசுவதன் மூலம் உங்களுடைய மனசு அப்படியே ரெக்கை கட்டி பறக்கும். நல்ல சுகமான அனுபவங்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது நடக்கும். உயர்ந்த இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தான் கொஞ்சம் டென்ஷன் அதிகமாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வெயிலுக்கு முன்பாகவே எல்லா வேலையும் முடித்து விடுங்கள். தேவை இல்லாமல் உச்சி வெயிலில் சமையல் அறையில் நின்று சமைக்க கூடிய வேலையை வச்சுக்காதீங்க. அது உங்களுடைய ஆரோக்கியத்திற்கும் பிரச்சனை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நினைத்தது நடக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகமாக பேச வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கப் போகிறீர்கள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் உங்களிடம் இருக்காது. ஆனால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நிறைகுடம் தலும்பாது என்று சொல்லுவார்கள் அல்லவா. அது போல தான் உங்களுடைய வாழ்க்கையும் இன்று அமைதியாக இருக்கும். அழகாகவும் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் காதலை வெளிப்படுத்தலாம் நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை முடித்து பாராட்டும் வாங்குவீர்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத நட்பு உறவு தானாகவே உங்களை விட்டு விலகி செல்லும். நல்லதை தேடி நீங்க போக வேண்டாம். உங்களுக்கான நல்லது உங்கள் வாசல் கதவை தட்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக தொடர் கதை போல இழுத்து வரும் பிரச்சனைகளை, இன்று முயற்சி செய்தால் சரி கட்டிவிடலாம். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்கு, ரொம்ப நாளா சுத்தம் செய்யாத வீடு, பழுது பார்க்காத மெஷின், இப்படி ஏதாவது இருக்கும் அல்லவா. அதை எடுத்து இன்னைக்கு சரி பண்ணுங்க. உங்களுக்கு அதுக்கான நேரம் வந்துவிட்டது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய புத்தி ரொம்ப ரொம்ப கூர்மையாக வேலை செய்யப் போகின்றது. எதிராளியின் போக்கை கண்டுபிடித்து முன்கூட்டியே சூதனமாக உங்களுடைய வேலைகளை செய்து முடித்து விடுவீர்கள். தந்திரமான வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாது. இது உங்களுடைய ஐடியாவா என்று. ஆனால் அசத்தலான ஐடியாக்கள் உங்களை அப்படியே மேலே கொண்டு சென்று விடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும்‌. குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் சுப காரியம் பற்றிய பேச்சுகள் தொடங்கும். இதனால் சந்தோஷத்தில் மனசு துள்ளி குதிக்கும். அதாவது இளைஞர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும். வேலை செய்பவர்கள் தொழில் செய்பவர்கள் எல்லாம் அவரவருடைய குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்கணும். நேரத்தை வீணடிக்க கூடாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வீட்டில் எதிர்பாராமல் உண்டான செலவு கையை கடிக்கும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இதையெல்லாம் எப்படியோ சமாளித்து விடுவீர்கள். ஆனால் மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தான் கொஞ்சம் சிரமம் இருக்கும். உறவுகளுக்குள் மனஸ்தாபம் வரும். நெருங்கிய உறவு பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளை அடுத்தவர்களிடம் சொல்லி அழ கூட முடியாது. அந்த அளவுக்கு வேலையில் கலகத்தை செய்து வைப்பார்கள். கோடி கோடியா சம்பாதிப்பவர்கள் எல்லாம் கூட இவ்வளவு எதிரியை வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்த சம்பாதிக்கும் பத்தாயிரம் ரூபாய்க்கு, பத்தாயிரம் பேச்சு, பத்தாயிரம் எதிரிகள், அப்பப்ப இவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று உங்களுக்கு போய்விடும். பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.