சனியின் பார்வையால் ராஜயோகம்… பணமழையில் நனைய போகும் ராசியினர் இவர்கள் தான்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார்.

அந்தவகையில் கும்ப ராசியில் பிரவேசித்து வரும் சனிபகவான் எதிர்வரும் ஜூன் மாதம் 29 ஆம் திகதி சொந்த ராசிக்கு பெயரத்ச்சியடைகின்றார்.

சனிபகவானின் பார்வையால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு சாதக பலன்களை கொடுக்கும். அவ்வாறு அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம்

சனியின் இந்த பார்வையால் மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலப்பகுதி நன்மையானதான அமையும். எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். பேசும் போது மிகவும் நிதானமாக பேச வேண்டியது முக்கியம். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் பார்வையால் பல வழிகளிலும் நன்மை வந்து சேரும். நிதி விடயங்களில் சிறப்பாக முன்னேற்றம் இருக்கும். வியாபரம் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.

மிதுனம்

சனியால் மிதுன ராசியினருக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. நிதி விடயத்தில் இருந்த அனைத்து தடைகளும் விலகும்.