மகிமை அளிக்கும் குரோதி வருட தமிழ் புத்தாண்டு ; வெற்றியை பெற உள்ள 5 ராசிகள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

குரோதி தமிழ் வருடத்தில், குரோதி என்றால் பகை, கேடு என்று பொருள். ஏப்ரல் 14ம் திகதி இந்த வருடத்திற்கான புத்தாண்டு தொடங்குகிறது.

இந்த குரோதி வருடத்தில் சில ராசியினருக்கு பல வகையில் நன்மைகள் நடக்கக்கூடிய ஆண்டாகவே அமையப் போகிறது. சுப பலன்களைப் பெற உள்ள 5 ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் சாதக பலன்கள் கிடைக்கும். குரு உங்களின் ராசியில் இருப்பதும், தொடர்ந்து 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு செல்வதும் உங்களுக்கு நிதி ரீதியான வெற்றியை பெற்றுத் தருவதாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெற்றிடலாம்.

கடந்த கால அனுபவங்களிலிருந்து வேலைகளை சிறப்பாக முடித்து நற்பெயரும், , பாராட்டும், பதவி உயர்வும் பெற வாய்ப்புள்ளது. உங்களின் ஆரோக்கியம் மேம்படக்கூடிய காலமாக இருக்கும்.

கடக ராசி

கடக ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டில் பல வகையில் பயனுள்ளதாக அமையப் போகிறது. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தைரியமாகச் செயல்படுவீர்கள். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

உங்களின் பொறுப்புகளைச் சரியான நேரத்தில் செய்து முடித்தாலே வெற்றி மேல் வெற்றி பெற்றிடுவீர்கள். பணியிடத்ஹ்டில் சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக கிடைக்கும். உங்களின் ராசிக்கு அஷ்டம சனி நடக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதால், எந்த ஒரு முடிவையும் நன்றாக யோசித்து எடுக்கவும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டானது மங்களகரமானதாகவும், சுப பலன்களையும் அதிகமாக கிடைக்கக்கூடிய வருடமாக அமைய உள்ளது. இந்த ஆண்டில் உங்களின் தந்தை மற்றும் முன்னோர்களின் சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.

வெளியூர், வெளிநாடு சென்று கல்வி கற்க, வேலை பார்க்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். திருமண முயற்சி, குழந்தை பாக்கியத்திற்காக முயல்பவர்களுக்குக் கடவுளின் அனுக்கிரகம் கிடைக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கான இந்த குரோதி புத்தாண்டு அறிவுசார் மற்றும் செயல்திறன் கூடக்கூடிய காலமாக இருக்கும். உங்களின் செயல்பாடுகளால் வெற்றியும், நற்பெயரும் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவீர்கள். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அவர்களின் ஆசை நிறைவேறும்.

அதிர்ஷ்டத்தின் ஒளி உங்கள் மீது படும். ஆரோக்கியம் மேன்மை அடையும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ள என்பதால், உணவு விஷயத்திலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். ஆன்மிகத்திலும், புனித யாத்திரை செல்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்ப ராசி

சனி பகவான் ஆட்சி, அதிபதியாக, ஏழரை சனியின் உச்சமான ஜென்ம சனி நடக்கக்கூடிய காலமாக கும்ப ராசி விளங்குகிறது. இருப்பினும் இந்த ஆண்டில் நிகழும் கிரக அமைப்பு, கிரக பெயர்ச்சிகளானது கும்ப ராசிகளுக்கு பல விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித் தருவதாகவே அமைய உள்ளது.

இந்த தமிழ் புத்தாண்டில் கும்ப ராசிகளுக்கு நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம், புதிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் முன்னர் முதலீடு செய்த இடங்களிலிருந்தும், சொத்துகளிலிருந்து உங்களுக்கு வருவாய் அல்லது லாபம், வெற்றியை பெறுவீர்கள். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் அமையக்கூடும்.