தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024: கால் மேல கால் போடும் காலம்.. அரியணை ஏறப்போகும் அந்த ராசி!! உங்க ராசியும் இருக்கானு பாருங்க!

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும்.

அதேபோல் சுபத்தினங்கள், புதிய வருடங்களில் கிரகங்களின் நிலைகளை பொருத்தும் உங்கள் ராசி பலன்கள் மாறும். தமிழ் வருடங்கள் மொத்தம் 60 வருடங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன. இந்த 60 வருடங்கள் மாறி மாறி சுழற்சியில் வருவது வழக்கம். இதில் முப்பத்தெட்டாவது வருடமான குரோதி வருடம்தான் இப்போது பிறக்க போகும் வருடம்.

இந்த புத்தாண்டில் கேது, ராகு, சுக்கிரன் சஞ்சரிக்கும் இடங்களை பொறுத்து உங்களின் பலன் மாறும்.

இது போக குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்திற்கு முன்பாக தமிழ் புத்தாண்டில் ஏப்ரல் 14க்கு பின் ரிஷப ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

பொறுமையாக இருங்கள்:
உங்களுக்கு நல்ல காலம் தொடங்க போவதெல்லாம் மே 1ல்தான். அதனால் 15 நாட்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவும். எதையும் அவசரப்பட்டு செய்ய வேண்டாம். பொறுமையாக இருப்பதே உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் காக்கும். கஷ்டங்களின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.

அலட்சியம் வேண்டாம்:
எதிலும் அலட்சியம் வேண்டாம். அடுத்த 15 நாட்களை கடந்து விடுங்கள். புத்தாண்டு குருபெயர்ச்சியும் சேர்ந்து உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். தொட்டதெல்லாம் தடங்கல் இருக்கும் என்றாலும்.. எந்த காரியமும் நடக்காமல் போகாது.

கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக அந்த காரியம் நடக்கும். ரிஷப ராசிக்கு ஜென்ம இடத்தில் குரு மாற உள்ளது. அவர் 5, 7, 9 இடங்களை பார்க்கிறார். அவர் இருக்கிற இடத்தை விட பார்க்கிற இடம் முக்கியம் என்பதால் தடங்கல்கள் வந்தாலும்.. நீங்கள் நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள்.

கால் மேல கால் போடும் காலம்:
புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்கு பின் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். கால் மேல் கால் போடும் காலம் வரும். எதுவும் நல்லதே நடக்காதா.. தடங்கல்கள் மட்டுமே வருமா என்று கேட்க வேண்டாம். சில நல்ல விஷயங்களும் நடக்க போகின்றது. குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும்.

பணம் வரும்:
நீங்கள் வேலையில், படிப்பில் அசத்த போகிறீர்கள். அரியணையில் ஏறும் காலம் ஏற்படும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வேலையில் பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்:
குடும்பத்தில் சண்டைகள் வரலாம். முக்கியமாக கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படும். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.

பரிகாரம்;
வடபழனி முருகன் கோவில் அல்லது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று பூஜை செய்யுங்கள்.