அட்சய திருதியையான இன்றைய நாளில் ராஜ யோகம் கிடைக்கும் ராசிக்காரர்கள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

2024 ஆம் ஆண்டு அட்சய திருதியை 10ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமி தேவியின் முழு அருள் கிடைக்க கூடிய இந்த அற்புத தினத்தில் உருவாக்கக்கூடிய கிரக சேர்க்கை, ராஜ யோகங்களால் ஐந்து ராசி சேர்ந்த நபர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய நிலையில், அங்கு சந்திரனும் சேர்ந்து கஜகேசரி ராஜயோகம் உருவாக்குகின்றனர். மேலும் சனி பகவான் தன் சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ யோகம் உருவாக்குகிறார்.

மேலும் மேஷ ராசியில் சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் சுக்கிர ஆதித்யராஜ் யோகம், மேலும் ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் அடைவதால் சசி யோகம் உருவாகிறது. இப்படி நான்கு ராஜ யோகங்களால் அதிர்ஷ்ட சுப பலன்களை பெற உள்ள ராசிகள் யாரென தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை நன்னாளில் ராஜ யோகங்களால் அற்புத பலன்களை பெறுவீர்கள். மேலும் ராசியிலே உருவாகும் கஜகேஸ்வரி ராஜயோகத்தால் உங்களின் தைரியம் மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். செல்வ பலன் பெறுவீர்கள். ரிஷப ராசியினருக்கு பெரிய தொழில், வேலை வாய்ப்புகளை பெறுவீர்கள். இந்த காலத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய சட்ட தகராறுகள் தீரும். உங்கள் செயலில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது.

கடக ராசி

கடக ராசிக்கு லாபம், வெற்றியும் சேரக்கூடிய நாளாக அட்சய திருதியை அமையும். சமூகத்தில் உங்களின் செயல்பாட்டால் புகழும், மரியாதையும் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில நல்ல செய்திகளை பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு, புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த அட்சய திருதியை சுப தினத்தில் புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் சொத்து வாங்கும் கனவு நனவாகும் இன்று உருவாகக்கூடிய நான்கு ராஜ யோகங்களால் உங்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். உங்களின் வருமானம் உயரும். எந்த ஒரு செயலை எடுத்துக் கொண்டாலும் அதில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த அட்சய திருதியை நன்னாள் பலவகையில் அற்புத பலன்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் சில பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் படைக்கலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து பலன்களை வேறு பெயர்கள். உங்களின் சொத்து மதிப்பு உயரும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களின் செயல்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள்.

மகர ராசி

மகர ராசி சேர்ந்தவர்களுக்கு அட்சய திருதியை நன்னாளில் நல்ல யோகம், வாழ்க்கையில் புதிய உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்க கூடியதாக இருக்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் தீரும். உங்களின் எதிர் நிலைமையில் முன்னேற்றம் அடையும். பணம் தொடர்பாக எதிர்கொண்ட பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அடைந்தீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றமும், நல்ல வாய்ப்பு உருவாகும்.