புதன் பெயர்ச்சி பலன்கள்: இன்று முதல் பணமழையில் நனையும் ராசிகள் இவங்க தான்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இன்று புதன் பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ள நிலையில், பணமழையில் நனைந்து ராஜயோகத்தை அடையும் ராசியினரைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சியின் போது சில ராசிகளுக்கு யோகமாக அமையும். ஜோதிடத்தில் சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக பயணிக்கும் கிரகம் புதன் ஆகும்.

கிரகங்களின் அதிபதியான புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இன்று புதன் கிரகம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இத்தருணத்தில் பணமழையில் நனைந்து ராஜயோகத்தை அடையும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியால் நன்மை கிடைப்பதுடன், வருமானம் மற்றும் லாபமும் கிடைக்கும். வருமானத்தில் உயர்வும், வெற்றியும் கிடைக்கும். மூத்த அதிகாரியுடன் நட்பு காணப்படும். பங்குச்சந்தை, லாட்டரி இவற்றிலும் லாபம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசியினர் இந்த புதன் பெயர்ச்சியில் கர்ம வீட்டில் பெயர்ச்சி நடக்கும் நிலையில், தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும், வணிகத்தை இத்தருணத்தில் விரிவு படுத்தலாம், புதிய ஆர்டர்களை பெறுவது நல்ல லாபம் கொடுக்கும்.

தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியால் சாதகமான சூழல் ஏற்படும். ஐந்தாம் வீட்டில் இந்த பெயர்ச்சி நடைபெறுவதால், நல்ல செய்திகள், வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி உதவி கிடைப்பதுடன், திடீர் நிதி ஆதாயமும் கிடைக்கும்.