சனியால் உருவாகும் ராஜயோகம்… ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்…

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

சனிபகவான் ஒரு ராசிக்குள் பிரவேசித்ததால் அதே ராசிக்கு மீண்டும் திரும்ப 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார்.

அந்த வகையில் 2023ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்த சனிபகவான் அடுத்த ஆண்டு வரை அங்கேயே தான் வசிப்பார். சனியின் பிறந்த இடம் கும்பம் அதில் தற்போது ‘ஷஷ’என்ற ராஜயோகம் உருவாகியுள்ளது.

அதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதக பலன்கள் கிடைக்கவுள்ளது. இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

சனி பகவானால் உருவாகியுள்ள ராஜயோகத்தால் விருச்சிக ராசியினர் தொழில் ரீதியில் அசுர வளர்ச்சி அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி பெருகும்.

துலாம்

ஷஷ ராஜயோகத்தால் துலாம் ராசியினருக்கு வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான யோகம் அமையும். நீண்ட நாட்களாக வாழ்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.தொழில் ரீதியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற மனிழ்ச்சியான செய்திகள் தேடிவரும் வாய்ப்பு காணப்படுகின்றது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மிகப்பொரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. இதுவரை காலடும் குடும்பத்தில் இருந்துவந்த துன்பங்கள் நீங்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும்.