சனி பகவானால் கிடைக்கும் ராஜயோகம்! 2025 வரை அதிர்ஷ்டத்தை பெறும் ராசி யார்? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

ஜோதிடத்தில் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருக்கும் சனி கிரகம் நீதியின் கடவுளாகவும், பலன்களை தருபவர் என்றும் கருதப்படுகின்றது. சனிக்கு தனி முக்கியத்துவம் உண்டு.

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் குறித்த ராசிக்கு வருவதற்கு 30 ஆண்டுகள் ஆகுமாம்.

சனி தற்போது கும்பத்தில் இருக்கும் நிலையில், ஷஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் சில ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியை குறித்து தெரிந்து கொள்வோம்.

துலாம்

சனிதேவர் துலாம் ராசியில் உச்சம் பெற்றுள்ள நிலையில், துலாம் ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகம் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் வேலைகள் நிறைவேறும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் இருக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

விருச்சிகம்

ஷஷ ராஜயோகம் காரணமாக நிதி நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பார்கள். நிதி ஆதாயத்திற்கான சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவார்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். உங்கள் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். வியாபாரத்தை விரிவுபடுத்த நல்ல உதவிகள் கிடைக்கும். வேலை மாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு. நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.