நவபஞ்சம யோகம் 2024: பெரும் இழப்புகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா?

ஜோதிடத்தை பொறுத்தளவில் கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கிரகங்களின் இயக்கத்தால் யோகங்கள் உருவாகி பலரது வாழ்வில் நன்மைகளும் தீமைகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில் தற்போது நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த யோகம் ரிஷப ராசியில் உள்ள வியாழன் மற்றும் கன்னி ராசியில் கேதுவால் உண்டாகிறது.

இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று ஒன்பதாம் மற்றும் ஐந்தாவது வீடுகளில் அமைந்துள்ளன.

இதனால் நவபஞ்சமி ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு அசுபமாக காணப்படுகிறது.

அந்தவகையில் இந்த யோகம் ஏற்படுவதால் எந்த ராசியினருக்கு தீய பலன்கள் நிகழவிருகின்றது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் நவபஞ்சம யோகத்தால் பண இழப்பை சந்திக்க நேரிடும். இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பரிவர்த்தனையில் சிக்கல் இருக்கலாம். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தும். வேலையில் பிரச்சனை வரலாம். வியாபாரிகள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும். வேலை நிறுத்தம் குழப்பத்தை உருவாக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் பிரச்னைகளை ஏற்படும். நற்பெயரை இழக்கக்கூடும். நீங்கள் சட்ட விவகாரத்தில் ஈடுபடலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பண இழப்பை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தை பொறுமையுடன் கையாளவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பிரச்சனைகளை உருவாக்கும். முக்கியமான வேலைகள் தடைபடலாம். ஏமாற்றம் அடையலாம். அதேபோல, உயர் அதிகாரிகளிடம் இருந்து அவமானங்கள் ஏற்படலாம். கவலைப்படுவதைத் தவிர்த்து, நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.