தேடிவரப்போகும் ராஜயோகம்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை உங்களிடம் ஒப்படைத்தாலும் அதை சுறுசுறுப்பாக சொன்ன நேரத்துக்கு முன்கூட்டியே செய்து முடித்து விடுவீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். சந்தோஷம் நிறைந்த நாள் இது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறைவும் இருக்காது. ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன பொருள் இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். கடன் வாங்க வேண்டாம். கடன் கொடுக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. மற்றபடி குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக எப்போதும் போல செல்லும். பிரச்சனைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரும். அதையெல்லாம் கொஞ்சம் கவனத்தோடு பார்த்துக் கொள்ளுங்கள். கவனக் குறைபாடுடன் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கட்டுமான தொழில் நல்ல முன்னேற்றம் தரும். கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று லாபம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய தேவைகளை புரிந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான உதவியை செய்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஏதோ ஒரு யோசனை மனதை குழப்பிக் கொண்டே இருக்கும். தேவையற்ற விஷயங்களை சிந்தனை செய்து கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுடைய அன்றாட வேலையில் சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருக்கும். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். தேவையற்ற சண்டை சச்சரவுகளுக்கு போக வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் தடைப்படும். எடுத்த காரியம் உடனடியாக வெற்றியை கொடுக்காது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிர்கள். சிலருக்கு நிறைய முன் கோபம் வரும். அடுத்தவர்களிடம் சண்டைக்கு போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வெற்றியோ தோல்வியோ பொறுமை காக்கவும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு. நிச்சயம் நல்லது தான் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமை வெளிப்படும். உங்களுடைய பெயர் புகழ் அந்தஸ்து உயரும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். முதலீடு செய்வதில் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. பெரிய பெரிய விஷயங்களுக்கு முடிவு எடுக்கும்போது வீட்டில் பெரியவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனை நீங்கும். நிதிநிலைமை சீராகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவு உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலையும் பம்பரம் போல சுழன்று சுழன்று செய்வீர்கள். அடுத்தவர்களுடைய கண்திருஷ்டி உங்கள் மேல் படும் அளவுக்கு, நீங்கள் திறமைசாலியாக இருக்கப் போகிறீர்கள். பல நாள் கனவு நினைவாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட அதிக லாபத்தை பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை நிறைந்த நாளாக இருக்கும். வெளியூரில் இருப்பவர்களுக்கு குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். இதனால் உங்களுடைய வேலையில் கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தில் கூடுதல் அக்கறை காட்டவும். முழுசாக அடுத்தவரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீங்க. உங்களுடைய வேலை, உங்களுக்கான வேலையை, உங்கள் கண் பார்வையில் நடத்திக் கொள்ளுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்காண நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை. கூட்டு தொழிலாக இருந்தால் பார்ட்னரிடம் கவனமாக இருக்கவும். கணக்கு வழக்குகளை அடிக்கடி சரி பார்க்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.