உண்டான கஜலட்சுமி யோகம்.. அதிர்ஷ்டத்தில் மூழ்கப்போகும் 3 ராசிகள்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டயோகம் தெரியுமா..!

நவகிரகங்களின் மங்கல நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

கடந்த மே 1ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்குச் சென்றார். அதேபோல், சுக்கிரனும் மே 19ஆம் தேதியான ரிஷப ராசிக்குச் செல்கிறார்.

குரு மற்றும் சுக்கிரனின் இணைவின் காரணமாக, கஜலட்சுமி யோகம் உண்டாகிறது.

இந்த கஜலட்சுமி யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசியினருக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன.

மேஷம்

 •  வாழ்வில் நல்ல நிலைமையை எட்டுவர்.
 • இந்த காலகட்டத்தில் நிலுவையில் இருந்த பணிகள் முடியும்.
 • இக்கால கட்டத்தில் தொழில்முனைவோருக்கு வருவாய் அதிகரிக்கும்.
 • போட்டிகள் குறையும்.
 • மேஷ ராசியினர், தங்கள் துறைகளில் முன்னேற நல்ல வாய்ப்பு அமையும்.
 • அதைப் பயன்படுத்திக்கொண்டால் ஏற்றம் தான்.
 • பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரித்து முதலாளியின் ஆதரவைப் பெறுவீர்கள்.
 • மேஷ ராசியினரின் குடும்பத்தில் நல்ல விஷேசங்கள் நடக்கும்.

சிம்மம்

 • திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.
 • அந்நியோன்யம் கூடும்.
 • கடன்பட்டு சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்கு, வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிட்டி, கடனை அடைப்பர்.
 • சிம்ம ராசியினருக்கு, கஜலட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தால், பொருளாதாரச் சிக்கலில் இனி சிக்கமாட்டார்கள்.
 • உடலில் இருந்த தேகப் பிரச்னைகள் சரியாகும்.

மகரம்

 •  கஜலட்சுமி யோகத்தால், பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
 • இந்த காலகட்டத்தில் உங்கள் சொல் இனிமையாகும்.
 • பணியில் இருப்பவர், தன் துறையில் முன்னேறுவர்.
 •  உடல் நலம் மேம்படும்.
 • வம்பு, வழக்குகளில் சாதகமான தீர்வுகள் வரும்.