செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகம்: அதிக பண வரவை பெறும் 4 ராசிகள்! இந்த 4 ராசியில் உங்க ராசி இருக்குதா?

செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ராஜயோகத்தை அடையும் 4 ராசிகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

செவ்வாய் பெயர்ச்சி
ஜோதிடத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றும் நிலையில், இந்நிகழ்வினை கிரக பெயர்ச்சி என்று அழைக்கப்படுகின்றது.

ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதயம், அஸ்தமனம், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் நிகழும் நிலையில், இத்தருணத்தில் சில தாக்கமும், சில சுப பலன்களும் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய், தைரியம், வீரம், நிலம், வீடு, திருமணம், சாதனை, அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக செவ்வாய் கிரகம் பார்க்கப்படுகின்றது.

கிரகங்களின் சேனாதிபதியாக பார்க்கப்படும் செவ்வாய் கிரகத்தின் நிலையானது, ஜூன் மாதத்தில் மிகவும் சுவாரஸ்யமான வகையில் இருக்கும்.

மே மாதம் கடைசியில், அதாவது 31ம் தேதிசியில் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடையும் செவ்வாயின் மாற்றத்தினால், ஜூன் மாதத்தின் தொடக்கம் சக்திவாய்ந்த ருச்சக ராஜயோகத்தில் நடக்கும்.

செவ்வாய்ப் பெயர்ச்சியால் உருவாகும் சுவாரசியமான ராஜயோகம் ஜூலை 12 வரை நீடிக்கும். இத்தருணத்தில் வெற்றி மேல் வெற்றி பெறும் ராசியினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் கிரகமானது மேஷ ராசியினருக்கு ருச்சக ராஜயோகம் அதிக நற்பலன்களைத் தரும். இதனால் செல்வத்துடன் மரியாதை, மகிழ்ச்சி, செழிப்பை அடைவதுடன், வேலையிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபத்தினை பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியானது பல பயணங்களை மேற்கொள்ள வைப்பதுடன், பணி செய்யும் இடத்தில் பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவு கிடைப்பதுடன், இந்த கிரக பெயர்ச்சி காலத்தில் உங்களது சேமிப்பு அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைப்பதுடன், தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி கனவுகள் நிச்சயம் நனவாகும். இந்த காலத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம். உங்களது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

மீனம்

மீன ராசியினருக்கு இந்த கிரக பெயர்ச்சியானது நிதி ஆதாரத்தையும், கடின உழைப்பிற்கான பலனையும் கொடுக்கும். நேர்மறையான விளைவுகளால் பல ஆதாயங்களை பெறுவதுடன், நிதி நெருக்கடியும் முடிவுக்கு வரும். மன அமைதி பெற்று உறவுகள் மேம்படும்.