மனைவியை தேவதை போல் நடத்தும் ராசியினர் இவர்கள் தான்… யார் யார்னு தெரியுமா?

பொதுவாகவே எல்லா பெண்களும் தங்களுக்கு வரப்போகும் கணவர் தங்களை மதிக்க வேண்டும் எனவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் எதிர்ப்பார்ப்பது வழக்கம்.

யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்காத கணவர் கிடைத்துவிட்டால் அந்த பெண்ணை விட அதிஷ்டசாலி வேறு யாரும் இருக்க முடியாது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் மனைவியை ஒரு தேவதை போல் பார்த்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்த ஆண்கள் பராமரிக்கும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். ஒரு உறவில் இருக்கும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிக அக்கறையுடனும் கவனத்துடனும் இருப்பார்கள்.

பெரும்பாலும் தங்கள் துணையை அதிகமாக நேசிப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் அவர்களின் பார்வையில் மனைவியை தேவதையாகவே நினைப்பார்கள்.

துலாம்

துலாம் ராசி ஆண்கள் எப்போதும் தங்கள் உறவுகளில் நல்லிணக்கம் மற்றும் சமநிலையை மதிப்பவர்களாக இருப்பார்கள்

நேர்மை மற்றும் சமத்துவத்தை வலுவாக நம்பும் அவர்கள், தங்கள் துணையை மரியாதையுடன் நடத்துவார்கள்.

இவர்களிடம் இயல்பாகவே இருக்கும் காதல் அவர்களின் துணையை உண்மையிலேயே தேவதையை போல் உணரவைக்கும்.

மீனம்

மீன ராசியில் பிறந்த ஆண்கள் இரக்கம், அன்பு மற்றும் கலை உணர்வுகளுக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் தங்கள் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.

சவாலான காலங்களில் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவார்கள். அவர்கள் மனைவியிடம் அடிக்கடி அன்பை வெளிப்படுத்தி தேவதை போல் உணரவைப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் நம்பிக்கை மற்றும் தாராள மனம் கொண்ட நபர்களாக இருப்பார்கள்.

தங்கள் துணையின் கவனம் ஈர்ப்பது பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பது போன்ற செய்ல்களை அடிக்கடி செய்வார்கள். இவர்களுக்கு மனைவி தான் உலகில் மிகவும் முக்கியமான நபரா இருப்பார்.