ஏழரை நாட்டு சனியின் வக்ர பெயர்ச்சி.. 5 மாதங்களுக்கு சிக்கலில் விழப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்…

பொதுவாக ராசிபலன்கள் கிரக பெயர்ச்சியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றன.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 29ம் திகதி சனிக்கிழமை, அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சியடையவுள்ளார்.

இந்த பெயர்ச்சியால் சனிபகவான் எதிர்வரும் நவம்பர் 15 வரை வக்ர நிலையில் இருப்பார். இதனால் 5 மாதங்களுக்கு குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையாகவே இருக்கும்.

அப்படியான ராசிக்காரர்கள் யாவர்? அவர்கள் சந்திக்க போகும் பிரச்சினைகள் எப்படி இருக்கும்? என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.

1. மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் வேலையில் அதீத அக்கறையுடன் இருக்க வேண்டும். சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பது சிறந்தது. அத்துடன் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலப்பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்வது அவ்வளவு சரியாக இருக்காது. ஆகவே முடிந்தவரையில் பணம் கொடுக்கல் வாங்கல்களை குறைக்கவும்.

2. கடக ராசி

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகமான சர்ச்சைகள் இந்த காலப்பகுதியில் ஏற்படும். இதனை கவனமாக கையாள்வது மூலமே பிரச்சினைகளை கடக்க முடியும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டில் பிரச்சினை அதிகமாக இருந்தால் வாயை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும். பணப்பிரச்சினைகள் வரும். இதனால் பணம் கொடுக்கல் வாங்கல்களை குறைக்கவும்.

3. சிம்ம ராசி

தொழில், வியாபாரம், அலுவலகம் இப்படி பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதனால் தொழில் செய்யும் இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக் கூடாது. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் ஏதாவது நோய் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.

4. மகரம், கும்பம்

வேலைகளில் தேவையற்ற தடைகள் ஏற்பட வேண்டும். சனியின் வக்ர பெயர்ச்சியால் அதிகமாக பாதிக்கப்படும் ராசியினராக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள். குடும்பம், தொழில், காதல், திருமணம் இப்படி சிக்கல்கள் வரும் அனைத்திலும் அதீத கவனம் தேவை.