இன்றைய நாளில் நேர்மையாக சிந்திக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்! இந்த 3 ராசியில் உங்க ராசி இருக்குதா?

இன்றைய ராசிபலன் மே 29, 2024, குரோதி வருடம் வைகாசி 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம், மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது

அந்த வகையில் இன்றைய நாளுக்கான (2024.05.29) ராசி பலன் எந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி உண்டாகும் என பார்ப்போம்.

நாம் சிந்திக்கக் கூடிய நேர்மறையான சிந்தனை வெற்றியடைய நம்முடைய முயற்சி மட்டும் அல்லாமல், இந்த பிரபஞ்சமும் நமக்கு உதவக் கூடியதாக இருக்கும். நேர்மையான சிந்தனை நம்முடைய மனதையும், உடலையும் ஊக்குவிப்பதாக அமைகிறது.

சிம்ம ராசி

சிம்ம ராசியினர் சூரியனால் ஆளப்படக் கூடிய ராசி. இது உயிர், ஆற்றல் மற்றும் அரவணைப்பை குறிப்பிடக் கூடியது. ஆளுமை பண்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் எண்ணம் நேர்மறையாகவும், வெற்றி பெற வேண்டும் என்று என்பதாகவும் இருக்கும்.

இதன் காரணமாக இவர்களின் செழிப்பில் நல்ல வெற்றியை பெற்று நிதி ரீதியாக செயல்படுவார். இவர்களின் வெற்றியால் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தன்னை சுற்றியுள்ளவர்களிடம் பரப்புவார்கள். மேலும் இவர்களின் பெருந்தன்மை மற்றும் தாராளமான மனப்பான்மை இவர்களுக்கு நேர்மையாக சிந்திக்க கூடிய ஆற்றலை வழங்குகிறது

துலாம் ராசி

காதல் மற்றும் அழகின் கிரகமான சுக்கிர பகவான் ஆளக்கூடிய ராசி துலாம். இவர்கள் எப்போதும் இவர்களிடம் நல்லிணக்கமும், அன்பையும் எதிர்பார்க்கக் கூடியவர்கள். அனைவரையும் சமநிலையில் நடத்துபவர்கள். அதன் மூலம் அமைதியையும், இனிமையான சூழலையும் உருவாக்க நினைப்பவர்கள்.

இவர்களின் இந்த நேர்மறையான அணுகுமுறை பிறரிடம் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதும், மோதலை தவிர்க்கவும் உதவுகிறது. அவர்களின் வசீகரமான தன்மை பிறரை ஈர்ப்பதோடு, தனித்துவமான குணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் நேர்மறையான சிந்தனையானது, பிறருக்கு கலங்கரை விளக்கம் போல செயல்படுவார்கள்.

தனுசு ராசி

தனுசு ராசியை சேர்ந்தவர்கள் அதிர்ஷ்டம் மற்றும் தனத்தை அருளக்கூடிய குரு பகவானால் ஆளப்படக்கூடியவர்கள். இவர்கள் எந்த ஒருவிஷயத்தையும் செய்து முடிக்கக்கூடிய அசாதாரணமான நம்பிக்கை மற்றும் சாகச குணத்தை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் புதிய அனுபவங்களையும், வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள்.

இவர்களின் உற்சாகமான, நேர்மறையான சிந்தனை தன்னையும், பிறரையும் மகிழ்விக்கக்கூடியதாக அமையும். இதனால் எந்த வேலைகளையும் புத்துணர்ச்சியுடன் செய்து முடிக்க முடியும்.