ரிஷபத்தில் உதயமாகும் குரு: கொடிகட்டி பறக்க போகும் ராசியினர் இவர்கள் தான்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடதக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஜூன் 3ஆம் திகதி அனறு குருபகவான் ரிஷப ராசியில் உதயமாக இருக்கின்றார். இதனால் குறிப்பிட சில ராசிகளுக்கு வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்கள் நிகழவிருக்கின்றது.

9 கிரகங்களில் வியாழன் கிரகத்துக்கு அதாவது குரு பகவானுக்கு இந்து சாஸ்திரத்தில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

எனவே ரிஷப ராசியில் உதயமாகப்போகும் குருவினால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் உதயம் வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்களை கொடுக்கும். திடீர் பண வரவு கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை இல்லாவதவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமையும். மொத்தத்தில் இந்த ராசியினர் வாழ்வில் இந்த காலகட்டம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் உதயம் அதிர்ஷ்டம் நிறைந்த மாற்றங்களை கொடுக்கும். இந்த ராசிக்காரர்கள் வணிக ரீதியில் எதிர்பாராத முன்னேற்றத்தை காண்பார்கள். நிதி நிலை சாதகமாக இருக்கும். வாழ்வில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குரு குருவின் உதயத்தால் வாழ்வில் எதிர்பார்த்து காத்திருந்த அனைத்து விடயங்களும் நிறைவேறும். பணப்புலக்கம் அதிகரிக்கும். தொழில் ரீதியில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பாராத பல நல்ல மாற்றங்களை இந்த ராசியினர் சந்திப்பார்கள்.