100 ஆண்டுகள் பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஜூன் 15 முதல் பிரகாசிக்க போகும் ராசியினர்

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்யும்.

இந்த பயணத்தின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இந்த மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் மிதுன ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் “திரிகிரக யோகம்” 100 வருடங்களுக்கு பின் உருவாகிறது. இதன் தாக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி முதல் அவதானிக்கலாம்.

ஜீன் 15 முதல் வாழ்க்கையில் பிரகாசிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கன்னி ராசிக்காரர்கள்

கன்னி ராசியில் 10 ஆம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகப் போகிறது. இதனால் தனியாக வியாபாரம் செய்பவர்கள் வாழ்க்கையில் பிரகாசம் உண்டாகும். நீண்ட நாட்களாக சம்பள உயர்வு இல்லை என புலம்புபவர்களுக்கு ஜீன் 15 முதல் பணவரவு அதிகமாகும்.

நீண்ட நாட்களாக செய்ய முடியாமல் இருக்கும் வேலைகள் அனைத்து இந்த நாட்களில் செய்து முடிக்கப்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தொழிலதிபர்களாக இருப்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல பணவரவு இருக்கும்.

1. கும்ப ராசிக்காரர்கள்

திரிகிரக யோகம் கும்ப ராசியில் 5 ஆம் வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைகள் தொடர்பில் எந்தவித கவலையும் வேண்டாம் எல்லாமே நல்லதாக நடக்கும்.

தொழில், குடும்ப வாழ்க்கை, பணம் உள்ளிட்டவைகளில் நல்ல மாற்றம் காணலாம். பணியிடத்தில் அனைத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். காதலை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளீர்களா? கவலை இல்லாமல் வெளியில் சொல்லுங்கள். உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரலாம்.

3. மிதுன ராசிக்காரர்கள்

மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக பார்க்கப்படுகிறார்கள். திட்டமிட்டு வேலைகளை செய்வதால் அனைத்திலும் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். பணிப்புரியும் இடங்களில் பதவியுயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சமூகத்தில் உங்களுக்கு என தனியிடம் இருக்கும்.

நீங்கள் இழந்த மரியாதை மீண்டும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை நல்லப்படியாக உங்களிடம் நடந்து கொள்வார். குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருப்பதால் எந்தவித கவலையும் இன்றி உங்கள் தொழில் வேலைகளை பார்க்கலாம்.

முக்கிய குறிப்பு

இது ஒரு கணிப்பு மாத்திரமே. மேலதிக தகவல்களை உங்கள் குடும்ப ஜோதிடரிடம் கேட்டுக் கொள்ளலாம்.