சுக்கிரன் உதயம்: ஜூன் 30 முதல் அதிர்ஷ்டம் பெரும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழும் சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கின்றார். எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகவுள்ளது.

இது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கப்போகின்றது. குறித்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால். இந்த ராசியினர் வாழ்வில் பல சாதக விடயங்கள் நிகழ ஆரம்பிக்கும். சமூகத்தில் இவர்களின் மரியாதை மற்றும் அந்தஸ்து உயரும்.

நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால் முன்னரைவிடவும் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத வகையில் நிதி நிலை உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாவதால் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். தாய்வழி மற்றும் தந்தைவழி பரபரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இந்த காலப்பகுதியில் தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பேச்சாற்றலால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.