சனியின் வக்ர பார்வையில் சிக்கப்போகும் 3 ராசியினர் இவர்கள் தான்… ஜூலை மாதம் முதல் துன்பம் ஆரம்பம்!

கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார்.செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கை பாழாகிவிடும்.

அந்தவகையில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி அதாவது பஞ்சாங்கத்தின் படி ஆனி 15ஆம் திகதி சனிபகவான் வக்ர பெயர்ச்சி அடையப்போகின்றார். அதனால் குறிப்பிட்ட சில ராசியின் மீது சனிபகவானின் வக்ர பார்வை நேரடியாக தாக்கம் செலுத்தும்.

இதனால் குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் பெரிய கஷ்டங்களை எதிர்கொள்ள நேரிடும். அப்படி சனியில் தீய பார்வையில் சிக்கிக் தவிக்கபோகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

சனிபகவானின் வக்ர பெயர்ச்சி காரணமான மேஷ ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் முன்பு இருந்ததை விடவும் அதிகமாக பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

பல பிரச்சினைகளை ஒன்றாக சந்திக்க நேரிடுவதால் மனஅழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகமாக காணப்படுகின்றது. எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதனை வெற்றிகரமாக முடிக்க முடியாத நிலை உருவாகும்.

சிறிய வாய் தகறாறு கூட பெரிய சண்டையாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. பண விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். பாரிய நிதி இழப்பு ஏற்படுவதற்கான நிலை காணப்படுகின்றது.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி தொழில் ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பு காணப்படுகின்றது.வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் அதிகரிக்கும்.மன கவலைகள் அதிகமாகும்.

கும்பம்

சனியின் சொந்த ராசியாக கும்பம் அமைவதால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி சாதகமாக மாற்றத்தை கொடுக்காது. இவர்கள் புதிய வேலைகளை இந்த காலகட்டத்தில் ஆரம்பிப்பதை தவிர்த்துக்கொள்வது நல்லது.