சுக்கிரனால் சிறந்த செல்வத்தின் அதிபதியாக மாறும் ராசிகள் இவர்கள் தான் நீங்கள் என்ன ராசி?

சுக்கிர பகவான் கடந்த மே 27ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் தனது இடத்தை மாற்றினார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருந்தாலும் ஒரு சில ராசிகளுக்கு இது நன்மையை உண்டாக்கும். இந்த நன்மயை பெறப்போகும் ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.

கடகம்

கடக ராசியில் சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி முழுமையாக அதிஷ்டத்தை கொடுக்கும்.நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தின் அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.இந்த சுக்கிர பெயர்ச்சி ஒர சிறந்த காலமாக அமையப்போகிறது.

கன்னி

நீண்ட நாட்களாக உங்களது நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கைக்கு வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தினரால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையின் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

விருட்சிகம்

ஏராளமான பலன் கிடைக்ப்போவது உங்களுக்கு தான்.சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கல்யாண வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.