பூமியைக் கடந்து செல்லும் இராட்சத விண்கல்: பூமிக்கு ஆபத்தா?

பாரிய ஒலியை ஏற்படுத்தியவாறு இராட்சத விண் கல் ஒன்று நாளைய தினம் பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dwayne “TheRock” Johnson எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் ஆனது பாரிய ஒலி எழுப்பியவாறு செல்லும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதனை தொலைகாட்டியின்ஊடாக அவதானிக்க முடியும் எனவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இவ்விண்கல்லிற்கு முதலில் உத்தியோகபூர்வமாக 2014 JO25 என்றே பெயரிடப்பட்டிருந்தது.

இக் கல்லானது 650 மீற்றர்கள்நீளம் உடையது என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

அத்துடன் இது பூமியிலிருந்து1.8 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் பயணிக்கவுள்ளது.

அதாவது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தைப் போன்று 5 மடங்கு தூரத்தில் பயணிக்கவுள்ளது.